மயிலாடுதுறை மாவட்ட தேமுதிக சார்பில் கழக உட்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜலபதி தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் ராஜா பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உட்கட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் கேப்டன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முன்னதாக மயிலாடுதுறை நகர துணை செயலாளர் குமரவேல் குடும்பத்தில் மூவர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்கும் , மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய துணை செயலாளர் விஜயசேகரன் உயிரிழந்ததற்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் முன்னாள் தேமுதிக நிர்வாகி கலாநிதி மீண்டும் தாய்கழகத்தில் இணைந்து கொண்டதற்கு சிறப்பு அழைப்பாளர் சால்வை அணிவித்து மீண்டும் கழகப் பணியை தொடர வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பண்ணை பாலு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.