செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 19 வயதான வெங்கட் என்ற ஆண் வரிக் கழுதைப்புலி கடந்த இரண்டு மாத காலமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்தது.

பூங்கா கால்நடை மருத்துவர்களால் சிறந்த சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்பு செயலிழப்பின் காரணமாக இன்று உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.