மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற மாட்டார்” என சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக மாட்டார் எனவும், தனக்குப் பின்வருமானவரை தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரை வெளியில் வருமாறு கோரி திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ள வேளையிலேயே நாமல்லின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் திருகோணமலை ஊடாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதாக சமூக ஊடக அறிக்கைகள் வெளியானதையடுத்து போராட்டக்காரர்கள் கடற்படை தளத்தில் திரண்டிருந்தனர்.
Ahmed Asjad