October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

கணவர் வீட்டின் முன் தாலி கயிறுடன் தர்ணா போராட்டம் செய்த திருநங்கையால் மதுரையில் பரபரப்பு

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 2வருடமாக லிவிங்-டூ கெதர் வாழ்க்கை திருமணம் செய்ய வலியுறுத்தியபோது எஸ்கேப் – கணவர் வீட்டின் முன் தாலி கயிறுடன் தர்ணா போராட்டம் செய்த திருநங்கையால் மதுரையில் பரபரப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநிதி, இவரும் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் பகுதியை சேர்ந்த தங்கதுரை (எ) விவேக் என்ற வாலிபரும் ஒன்றாக கோவில் ஒன்றை நடத்தி வந்துள்ளனர் இதில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது

இருவரும் இரண்டு வருடமாக லிவிங்-டூ- கெதர் முறையில் ஒன்றாக ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென தங்கதுரை தலைமறைவானதாக கூறப்படுகிறது

இதனை அறிந்த திருநங்கை ஸ்ரீநிதி தங்கதுரை வீட்டுக்கு சென்று விசாரித்தபோது தங்கதுரைக்கும் மற்றொரு பெண்னுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்று அப்பெண்ணுடன் வாழ்ந்துவருவது

திருநங்கை ஸ்ரீநிதிக்கு தெரியவந்தது இதனையடுத்து செய்வதறியாது தவித்த திருநங்கை மதுரை எஸ்.பி.சிவபிரசாத்திடம் கணவரை சேர்த்து வைக்குமாறு புகார் அளித்துள்ளார்

எஸ்.பி.பாலமேடு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்டார்

போலீசார் உரிய விசாரணை நடத்தாததால்

கணவரை மீட்டு தருமாறு வாலிபர் தங்கதுரை வீட்டின் முன் தாலி கயிறுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுட்டார்

உடனடியாக சம்பவம் அறிந்த சோழவந்தான் போலீசார் திருநங்கை ஸ்ரீநிதியை அழைத்து இரு நாட்களில் வாலிபரை காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தி சேர்த்து வைப்பதாக ஆறுதல் கூறியதால் திருநங்கை அங்கிருந்து புறப்பட்டு சென்றார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க