முகப்புபொழுதுபோக்குசினிமா செய்திகள்கோலிவுட் பிரபல தயாரிப்பாளர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்

கோலிவுட் பிரபல தயாரிப்பாளர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கள்ளிப்பட்டி ஜோதி என்கின்ற ஜோதிராஜா இன்று உடல்நிலை குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அனைவருக்கும் தெரிந்த ஜோதிராஜா என்ற கள்ளிப்பட்டி ஜோடி. தமிழ் சினிமா இயக்குனரான கே பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு படத்தில் ஆபீஸ் பாயாக அறிமுகமானார் அதன் பின் படிப்படியாக வளர்ந்தார்.

மேலும் 150 படங்களுக்கு மேலாக குட்டி கோடம்பாக்கம் என அழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50 கிராமங்களில் லொகேஷன் மேனேஜராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

கற்பக ஜோதி பிலிம்ஸ் என்ற பெயரில் இயக்குனர் கஸ்தூரிராஜா வைத்து சோலையம்மா தாய் மனசு என்ற படங்களை தயாரித்தவர் தான் கள்ளிப்பட்டி ஜோதி.

கள்ளிப்பட்டி ஜோதி சில மாதங்களாக உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கள்ளிப்பட்டி ஜோதி மறைவுக்கு தமிழ் திரைப்பட திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!