2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் படம் வெளியானது. கே.ஜி.எஃப் படம் வெளியான போது ஏராளமான நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு சிலர் கே.ஜி.எஃப் படத்தை ஓடிடியில் பார்த்து பாராட்ட தொடங்கினர். கே.ஜி.எஃப் 1 பார்த்த பிறகு கே.ஜி.எஃப் 2 ஆம் பாகத்திற்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கினர். திரைத்துறையில் 4 ஆண்டுகளுக்கு பிறகும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றால் அது கே.ஜி.எஃப் 2 விற்கு தான்.

கே.ஜி.எஃப் -2 படத்தில் யாஷ் – க்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். கே.ஜி.எஃப் – 2 படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் மிரட்டும் வில்லனாக பார்க்கவே பயங்கரமாக நடித்துள்ளார். தற்போது ஸ்ரீநிதி ஷெட்டி சாண்டல் நிற ஜொலிக்கும் புடவையில் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறார்.








