Saturday, August 20, 2022
Saturday, August 20, 2022
spot_img
spot_img

இதய அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பம்மலைச் சேர்ந்த ஜெரீனா பேகம் ! மருத்துவ செலவிற்க்கான உதவித்தொகையை எஸ்.சீ.எஸ்.டி பெஃடரேஷன் அமைப்பினர் வழங்கினர்!!

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வசிக்கும் ஜெரினா பேகம் என்பவருக்கு நீண்ட நாட்களாக இதய அடைப்பு நோய் இருந்து வருகிறது மிகவும் வறுமையில் வாடும் இவர் மருத்துவ செலவிற்க்கு கூட பணமில்லா சூழலில் இருந்துள்ளார்.

அவரைக் குறித்து அவரது கணவர் சவுக்கத் அலி என்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இந்திய மக்கள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் அனகை டாக்டர் முரளிதரன் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்பு ஜெரினா மற்றும் அவரது கணவர் ஆகியோரை நேரில் அழைத்து அவரது மருத்துவ செலவிற்க்கான தொகையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இந்திய மக்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவர் சமத்துவ போராளி டாக்டர் சிங்கத்தமிழச்சி அவர்களின் கரங்களால் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் வழக்கறிஞர் நா. சரவணன், மாநில விசாரணை அணி தலைவர் லக்ஷ்மி பிரியா, முனைவர் வி.ஜி. அசோகன், சேவியர். ஆகியோர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க