Saturday, August 20, 2022
Saturday, August 20, 2022
spot_img
spot_img

மதுரை ராமநாதபுரம் தென்னிந்திய திருச்சபையின் ஏழாவது பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்

தென்னிந்திய திருச்சபையின் அங்கமாக மதுரை- இராமநாதபுரம் மண்டல 7வது பேராயராக  பாதிரியார் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் பதவியேற்றுக்கொண்டார்.

முன்னதாக மதுரை நரிமேடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து தென்னிந்திய திருச்சபையின் மதுரை இராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் முறைப்படி ஆராதனை நடத்தினார்.

அதனைத்தொடர்ந்து திருச்சபையின் பேராயர்கள் அவக்கு வெள்ளி செங்கோல் மற்றும் மோதிரத்தை அணிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பிற மாநிலங்களை சேர்ந்த 11 பேராயர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க