முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொது மக்களை திரட்டி பேரணி

ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொது மக்களை திரட்டி பேரணி

ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொது மக்களை திரட்டி பேரணி. ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் தகவல்.

ஜல்லிக்கட்டு பேரவையின் பேரவையின் 16வதுஆண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ராஜசேகர் தலைமையில் கோமதிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்வில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் ராஜசேகர் செய்தியாளிடம் கூறியதாவது, ஜல்லிக்கட்டு பேரவை 2007 முதல் நீதிமன்றம், அரசு மற்றும் பொதுமக்களிடம் வலியுறுத்தி தொடர்ந்து நடத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து தமிழக முழுவதும் உள்ள எங்கள் அமைப்பின் முக்கிய தலைவர்களை அழைத்து அவசர ஆலோசனை ஒன்று நடத்தி உள்ளோம்.

மத்திய மாநில, அரசுகள் நீதிமன்றத்தில் வலுவான வாதத்தை வைக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு கூட்டத்தை நடத்தியுள்ளோம். தற்போது மீண்டும் ஒரு வழக்கு வந்துள்ளது இந்த வழக்கு தேவையற்ற வழக்கு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என சட்டம் ஏற்று சொல்லப்பட்டது சட்டம் ஏற்றுவதற்கு முன்னதாக விலங்குகள் கொடுமைப்படுத்துவதுதிலும் விலங்குகளை காட்சிப்படுத்தக் கூடாது என்ற சட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு இந்திய அரசால் ஏற்படுத்தியுள்ள சட்டத்தில் இருந்து விலக்கு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியமானது கலாச்சாரமானது இது விதிவிலக்கு கொடுக்கிறோம் என இந்திய அரசின் அமைச்சரவையில் இருந்தும் சட்டத்துறை, சுற்றுச்சூழல் அமைச்சரவை மற்றும் நீதித்துறை உள்ளிட்ட ஐந்து துறைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கிறோம். இந்த சட்டத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்று கொடுத்த பின்னரே இந்த சட்டத்தை நிறைவேற்றினோம்.

ஆனால் 2017 ஜனவரியில் 23 இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது ஜல்லிக்கட்டு நடைபெற்றது அதே ஜனவரி 31ஆம் தேதி நீதிமன்றத்தில் இதே வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போதுதான் இந்த சட்டம் இயற்றியது செல்லாது இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சேலஞ்ச் செய்து அரசியல் சாசனம் அமர்வுக்கு அனுப்பப்பட்டு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் இதனை வைக்கப்பட்டது விசாரணை என்ற பெயரில் வாதங்களை அவருடைய வாதங்களை எடுத்து வைத்து முடிவு சொல்லப்பட உள்ளது இதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம் நாங்கள் சட்ட வழக்கறிஞர்களை வைத்து போராடுவதை விட சட்டம் ஏற்றும அரசாங்கம் வழிவகையில் சொல்ல வேண்டியது அரசாங்கம்.

எனவே நாங்கள் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கெஞ்சி கூத்தாடியாவது வழக்கில் அவர்களை ஈடுபட செய்து வெற்றி காண்போம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இருந்தாலும் அப்படியா வழக்கு வருகிறதா என கேட்கின்றனர் ஆதலால் ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் ஜல்லிக்கட்டு பேரவையின் மூலமாக மத்திய, மாநில அரசுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு முடிவு எடுக்க உள்ளோம் இந்த முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல தமிழக முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு நலன் விரும்பிகள் அனைவரையும் அழைத்து அவரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே அறிவிக்கப்படும்.

அரசுக்கு எங்களது கோரிக்கையை தெரிவித்துள்ளோம் இருந்த போதும் ஜல்லிக்கட்டு பொதுமக்களிடம் முழுமையான விழிப்புணர்வு இல்லை ஜல்லிக்கட்டு போட்டிகள் மீது மிகப் பெரிய ஆபத்து இருக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உள்ளது என்பது குறித்து தெரியவில்லை. அவர்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்கும் மத்திய அரசில் உள்ள அதிகாரத்தில் உள்ளவர்கள், அரசியல் பிரமுகர்களுக்கு தெரிய வைப்பதற்கு அடையாள நிகழ்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செய்தியாளிடம் கூறியதாவது,
ஜல்லிக்கட்டு போட்டிகளை காக்க வேண்டிய முக்கியமான பொறுப்பில் இருக்கிறோம் சமூக அழுத்தத்தை உருவாக்கினால் தான் இந்த வழக்கில் நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற சூழல் உள்ளது. சட்ட ரீதியான போராட்டத்தை நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டிய சந்திக்கக்கூடிய அதே வேளையில் சமூக ரீதியாகவும் தமிழ் சமூகம் அனைவரும் இணைந்து இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்கான அடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல வேண்டி உள்ளது அது சம்பந்தமாக அது தொடர்பாக இன்று ஜல்லிக்கட்டு பேரவை ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது நிச்சயமாக அவர்களுக்கு வர இருக்கின்ற குளிர்கால கூட்டத்தொடரில் தமிழ் சமூகத்தின் பெரும் அடையாளமாக பண்பாட்டு அடையாளமாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டை காக்கக்கூடிய விஷயத்தில் ஒன்றிய அரசு முழுமையாக தலையீடு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு என்பது தமிழ் சமூகத்தின் ஒரு அடையாளம் அதனை காக்கும் குரலை நாடாளுமன்றத்தில் வலிமையாக நான் முன் வைப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!