முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை 3ரூபாயாக மட்டுமே உயர்த்தி அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது

பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை 3ரூபாயாக மட்டுமே உயர்த்தி அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது

பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை 3ரூபாயாக மட்டுமே உயர்த்தி அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது,தனியார் பால் நிறுவனங்களில் பால் விலையை அரசு கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் – தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் தலைவர் பேட்டி.

மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டமானது நடைபெற்றது மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக அரசுக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இதனைத் தொடர்ந்து மாநில தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :

தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை வெறும் 3 ரூபாயை மட்டும் என அவசரவசரமாக உயர்த்தி அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரை சந்தித்து பேச வேண்டுமென அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் கூறியுள்ளோம் ஆனால் இதுவரையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

ஆவின் பால் விலையை நுகர்வோருக்கு 3ரூபாய் குறைத்தது அரசின் தவறான முடிவு, ஆனால் ஏற்பட்ட இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கவில்லை, விலை குறைப்பால் ஆண்டுதோறும் பால் உற்பத்தியாளர்களுக்கு 270கோடி ஆண்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும்,

நாங்கள் அரசிடம் மடிப்பிச்சை கேட்கவில்லை நாங்கள் உற்பத்தி செய்யும் பால் உற்பத்திக்கான விலையை தான் கேட்கிறோம் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும்,

தமிழகத்தில் மொத்தம் 257லட்சம் லிட்டர் பால் உற்பத்தியில் ஆவினுக்கு கடந்த ஆண்டு 37லட்சம் லிட்டர் பால் வரத்து இருந்த நிலையில் தற்போது 32லட்சமாக குறைந்துள்ளது எனவும்,

தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை குறைவாக தான் உள்ளது எனவும் தெரிவித்தார், 10ஆம் தேதி கால அவகாசத்திற்குள் தமிழக அரசிடம் மாடுமேய்க்கும் நாங்கள் பால் உற்பத்திக்கான பணத்தை தான் கேட்பதற்காக முதலமைச்சரை சந்திக்க அவகாசம் கேட்டுள்ளோம் எனவும்

தனியார் பால் விலையை கட்டுப்படுத்தும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், உணவுப்பாதுகாப்புத்துறை சட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்றப்பட வேண்டும் அதற்கான ஆவணங்களை நாங்களே வைத்துள்ளோம் என்றார்.

பணக்காரர்கள் பயன்படுத்தும் பால்களுக்கான விலை மட்டுமே உயர்ந்துள்ளது எனவும்

10ஆம் தேதிக்குள் முதலமைச்சரை நாங்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு அளிக்காதபட்சத்தில் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!