மதுரை புது ஜெயில் சாலை, கரிமேடு, அரசரடி உள்ளிட்ட போக்குவரத்து அதிகமுள்ள சாலைப்பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித்திரிகின்றன.

இவ்வாறு சுற்றித்திரியும் குதிரைகள் சாலையின் நடுவில் நின்று கொண்டு சாலை மறியல் செய்வது போல நிற்பதும், படுத்து தூங்குவதுமாக இருந்து வருகிறன்றன.
சாலையில் நின்று கொண்டிருக்கும் குதிரைகளில் சில குதிரைகள் திடீரென வெறி பிடித்தது போல சாலையில் அங்கும் இங்குமாக ஓடுவதாகவும்,
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளை நிலைதடுமாறச்செய்து விபத்துக்கள் ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பகல் மட்டுமின்றி இரவிலும் சாலையின் நடுவே குதிரைகள் படுத்து தூங்குவதோடு, போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிவதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.