முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள,வெளிநாட்டு விளையாட்டு வீரா்கள்,வீராங்கனைகள் விமானங்களில் சென்னைக்கு வரத்தொடங்கினா்

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள,வெளிநாட்டு விளையாட்டு வீரா்கள்,வீராங்கனைகள் விமானங்களில் சென்னைக்கு வரத்தொடங்கினா்

மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள,வெளிநாட்டு விளையாட்டு வீரா்கள்,வீராங்கனைகள் விமானங்களில் சென்னைக்கு வரத்தொடங்கினா்.

தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் இம்மாதம் 28 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கவிருக்கிறது.இதில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் விமானங்களில் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

அங்கேரி நாட்டை சேர்ந்த ஒரு வீரர்,ஒரு வீராங்கனை ஆகிய இரண்டு பேர், இன்று காலை 8.30 மணிக்கு துபாயில் இருந்து சென்னை வந்த எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அந்த இரண்டு விளையாட்டு வீரர்களையும், சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள், செஸ் ஒலிம்பிக் வரவேற்புக் குழுவினர் வரவேற்று, தனி காரில் சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

இதே விமானத்தில் மேலும் 20 வீரா்கள் வருவதாக இருந்தது. அந்த பயணம் மாற்றப்பட்டு, அவர்கள் இன்று இரவு 10.40 க்கு மலேசியா வழியாக, அந்த வீரர்கள் சென்னை வருகின்றனா்.

மேலும் இன்று இரவு மலேசியாவில் இருந்தும், ஏர் பிரான்சிலிருந்து வரும் விமானங்களிலும் வீரர்கள் சென்னை வர இருக்கின்றனா். அவர்களை வரவேற்று அழைத்து செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில், தமிழக அரசு நியமித்துள்ள சிறப்பு குழுவினரும், செஸ் ஒலிம்பிக் வரவேற்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!