logo

பல் வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகை!! முகம் வீங்கியதால் பரபரப்பு..!

 | 
swathi

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல் வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகையின் முகம் வீங்கி விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

swathi 2

பெங்களூர் ஜிபி நகரில் வசித்து வருபவர் நடிகை சுவாதி இவர் கன்னட நடிகை ஆவார். ஒரு சில படங்களிலும் மற்றும் சீரியல்களிலும் நடித்துள்ளார் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டுள்ளது இதற்காக அவர் ஹேண்ணூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவர் சுவாதிக்கு பல் வலிக்கு மாத்திரை கொடுப்பதற்கு பதிலாக ஒரு ஊசி பெயர் எழுதி கொடுத்து அதனை எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதன்பின் மருத்துவர் சொன்ன ஊசியை வாங்கிக் கொண்ட சுவாதி வீட்டுக்கு வந்ததும் அந்த ஊசியை பல் ஈறு பகுதியில் செலுத்தியுள்ளார். 

swathi 1

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் சுவாதியின் முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறியுள்ளது இதை பார்த்த சுவாதி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை தொடர்பு கொண்டு வீக்கம் குறித்து தெரிவித்துள்ளார். இதற்கு மருத்துவர் பல் ஈறில் ஊசி போட்டால் இப்படித்தான் இருக்கும் இருக்கும் விரைவில் குணமாகிவிடும் என  மருத்துவர் தெரிவித்துள்ளார்.

swathi 3

இதனால் கடந்த 20 நாட்களாக சுவாதி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். 20 நாட்கள் ஆகியும் வீக்கம் சரியாகாமல் இருப்பதால் மீண்டும் மருத்துவரை தொடர்பு கொண்டுள்ளார் சுவாதி. ஆனால் மருத்துவர் தரப்பில் யாரும் சரியாக பதில் சொல்லவில்லை என சுவாதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசியலில் களமிறங்கும் நடிகை திரிஷா! எந்த கட்சியில் தெரியுமா? 

சாய் பல்லவியை கைது செய்ய புகார்.. அதிகரிக்கும் பிரச்சனை.. படத்திற்கு சிக்கலா? புரமோஷனா?

ரொம்ப பெருமையா இருக்கு.. கமலை பாராட்டிய ஹாலிவுட் ஹீரோயின்.. யாருன்னு தெரியுமா!

மடியில் உட்கார சொன்னார்.. தவறாக நடக்க முயன்றார்.. புது சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீநிதி !

Around The Web

Latest News

You May Like

Featured