முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்வேலூரில் அதிர்ச்சி : தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனை - சுருண்டு விழுந்து மாணவன் பலி

வேலூரில் அதிர்ச்சி : தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனை – சுருண்டு விழுந்து மாணவன் பலி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் ஆசிரியர் கொடுத்த தண்டனையின் போது மயக்கம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கிறார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருபவர் மோகன்ராஜ். இவர் அணைக்கட்டு அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தகப்பனார் பெயர் குப்புசாமி.

மோகன்ராஜ் ஒன்பதாம் வகுப்பு இ பிரிவில் படித்து வருகிறார். இந்த வகுப்பில் மொத்தம் 40 மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று மதியம் 3 மணி அளவில் பள்ளி ஆசிரியர்கள் யாரும் வகுப்புக்கு வராத நிலையில் 40 மாணவர்களும் சத்தம் போட்டு சக மாணவர்களை அடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளனர்.

இதனைப் பார்த்த தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் 40 மாணவர்களையும் விளையாட்டு மைதானத்தில் நான்கு முறை சுற்றி வருமாறு தண்டனை வழங்கி உள்ளார். இதன் அடிப்படையில் 40 மாணவர்கள் 2வது சுற்றில் விளையாட்டு மைதானத்தை சுற்றி வரும் பொது மோகன்ராஜ் மயக்கம் அடைந்துள்ளார். அருகில் இருந்த மாணவர்கள் மோகன்ராஜ் மயக்கமானதை பார்த்து தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.

இதனை அறிந்த தலைமையாசிரியர் மோகனை உடனடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவ நிர்வாகம் பெற்றோர்களிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். பெற்றோர்கள் மருத்துவமனைக்கு வந்து அரை மணி நேரத்துக்கு பிறகு பெற்றோர்கள் கண்முன்னே மோகன்ராஜ் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.

எந்த ஒரு புகார் கொடுக்காமல் மோகன்ராஜின் சடலத்தை பெற்றோர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். தகவல் அறிந்த அணைக்கட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்த ஒரு வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!