October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

வேலூர் காட்பாடியில் பட்டியல் சமூக வண்டரந்தாங்கல் ஊராட்சி மன்ற துணை தலைவரை சாதியை காரணமாக வைத்து பணி செய்ய விடாமல் தடுக்கும் கவுன்சிலர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் மனு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா வண்டரந்தாங்கல் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துணைத் தலைவராக முத்துலட்சுமி என்பவர் பதவி வகித்து வருகிறார்.

இவர் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் இவரை பணி செய்ய விடாமல் அதை ஊராட்சி மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள 2வது வார்டு உறுப்பினர் குமரேசன், 3வது வார்டு உறுப்பினர் தீபலட்சுமி அவரது கணவர் விஸ்வநாதன், 7வது வார்டு உறுப்பினர் தனலட்சுமி அவரது கணவர் லட்சுமணன், ஆகியோர் தொடர்ந்து தடுத்து வருவதாகவும் முத்துலட்சுமி அலுவலகத்திற்குள் வந்தால் உட்காருவதற்கு கூட நாற்காலியை தருவதில்லை எனவும் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பணி செய்தால் அவர்களுக்கெல்லாம் நீ எப்படி வேலை செய்வாய் என்று மிரட்டுவது ஊராட்சி மன்ற தலைவரையும் பணி செய்ய விடாமல் தடுப்பது சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசுவது இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இது குறித்து காட்பாடி காவல்நிலத்தில் அவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையும் தமிழக அரசும் தமிழக தாழ்த்தப்பட்டோர் நல ஆணையமும் உடனடியாக இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க