தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. இதில் மதுரை, சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சுருக்கெழுத்து தேர்வில்(Audio System) பழுதடைந்து மாணவர்கள் தகுந்த நிவாரணம் தேர்வு அன்றே வழங்கப்பட வேண்டும். இவ்வாறு நடைமுறைபடுத்தாத காரணத்தினால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெகுவாக கடந்த 2 தேர்வுகளில் பாதிப்பு அடைந்துள்ளது. பாதிப்படைந்தால் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்விற்காக அந்தந்த மாவட்டத்திலே மையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும்,
சுருக்கெழுத்து தேர்வில் இரண்டே நிமிட மாதிரி டிக்டேசனுக்கு பதிலாக அரசுத் தேர்வில் பின்பற்றப்படும் 7 நிமிட மாதிரி டிக்டேசன் அளிக்க வேண்டும், சுருக்கெழுத்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு திருச்சி மாவட்டத்திலும் மையம் அமைத்திட வேண்டும்,
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு சான்றிதழ்களில் அனைத்து நிலைகளிலும் மாணவர்களுடைய புகைப்படம் அமைய வேண்டும், பள்ளி பொதுத்தேர்வு போல தட்டச்சு மாணவர்களின் சான்றிதழ்களில் அவர் பயின்ற தட்டச்சு பள்ளியின் பெயரையும் அச்சிடவேண்டும் உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் ரவிசந்திரன் பேசுகையில்:
தொழில்நுட்ப கல்வியியல் இயக்ககத்தின் சார்பில் நடத்தப்பட்ட கடந்த 4 தேர்வுகளுக்கான சிறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், தட்டச்சு தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளதை வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் தேர்வின் போது கேட்ஜட் கோளாறு ஏற்படும் போது மாணவர்களின் நலன்கருதி மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும், கணினி தேர்விலும் விடைத்தாள் திருத்தும் பணியில் தகுதியும் அனுபவமும் பெற்ற தட்டச்சு பள்ளி ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.