Saturday, August 20, 2022
Saturday, August 20, 2022
spot_img
spot_img

மயிலாடுதுறையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி செல்ஃபி எடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள பெரிய பள்ளிவாசல் தலைவர் எம்.எஸ் சபீர்தீன் தலைமையில் அப்துல் காதர் தொழுகையை நடத்தி வைத்தார்.

இத்தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு‌ வாழ்வில் வளமோடு ஒற்றுமை உணர்வோடு சிறப்புற்று வாழவும் தொழுகை நடத்தினர். பின்னர்,தொழுகை முடிந்ததும் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டித் ஆரத் தழுவி தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் செல்போனில் செல்பி எடுத்தும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் தியாகத் திருநாள் சிறப்பு கூட்டுத்தொழுகை திருவாரூர் சாலை தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆ.இளஞ்செழியன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க