முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மதுரையில் மருந்து விற்பனை கடையின் ஊழியர் வழிகாட்டுதலுடன் அரங்கேறிய கொள்ளையில் 4 பேர் கைது...

மதுரையில் மருந்து விற்பனை கடையின் ஊழியர் வழிகாட்டுதலுடன் அரங்கேறிய கொள்ளையில் 4 பேர் கைது போலீசார் விசாரணை

மதுரை வடக்கு மாசி வீதி பகுதியை சேர்ந்த சரஸ்வதி தேவி (வயது 47) என்பவர் செல்லத்தம்மன் கோவில் தெருவில் மருந்து விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் அவர் பணியாற்றும் மருந்து விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் நள்ளிரவில் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் உபகரணங்கள், செல்போன், 6 சிசிடிவி கேமரா, பணம் வைத்திருக்கும் லாக்கருடன் கொள்ளையடித்து ஆட்டோவில் தப்பி சென்று உள்ளனர்.

இந்த திருட்டு குறித்து சரஸ்வதிதேவி திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் கருப்பாயூரணி யைச் சேர்ந்த பிரபு என்பவர் அதே நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் அவரது வழிகாட்டுதலின்படி, இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் திருட்டில் ஈடுபட்ட ஆண்டார்கொட்டாரம் நந்தி கோவில் தெருவை சேர்ந்த ஜீவானந்தம் 27, அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் 18, மாரிமுத்து 37, மற்றும் மருந்தகத்தின் ஊழியர் பிரபு 20 ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்திய ஆட்டோ, கொள்ளையடித்துச் சென்ற லாக்கர் மற்றும் லாக்கரில் இருந்த பணம், கம்ப்யூட்டர் உபகரணங்கள் கேமராக்களையும் பறிமுதல் செய்தனர்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!