சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு.. பாஜகவினர், திரைபிரபலங்கள், ரசிகர்கள் வரவேற்றனர்….. விரைவில் டெல்லி சென்று பதவியேற்கிறார்…..

மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்ட இளையராஜா பல்வேறு இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார் இந்த நிலையில் இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு இன்று சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏ.க்களும் இளையராஜாவை வரவேற்றனர். இதை போல் இயக்குனர் பாரதிராஜா, கங்கை அமரன், ஆர்.கே செல்வமணி, சினிமா இசைக்கலைஞர்கள் சங்கம், மற்றும் ரசிகர்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
புதிதாக அறிவிக்கப்பட்ட நியமன எம்பிக்கள் சிலர் நேற்று பதவி ஏற்ற நிலையில் இளையராஜா நேற்று பதவியேற்கவில்லை இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால் விரைவில் டெல்லி சென்று பதவியேற்பார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.