முகப்புபொழுதுபோக்குசினிமா செய்திகள்விவாகரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை... திருமணம் குறித்து த்ரிஷா சொன்ன விஷயம்!

விவாகரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை… திருமணம் குறித்து த்ரிஷா சொன்ன விஷயம்!

திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை த்ரிஷா அளித்த பதில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’ படத்தில் குந்தவையாக நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார் த்ரிஷா.

இப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதோடு, உலகளவில் வசூலை குவித்து வருகிறது. 96 படத்துக்குப் பிறகு த்ரிஷா நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரியாக போகாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், அதை சரிசெய்ததோடு மட்டுமல்லாமல் த்ரிஷாவின் கரியரில் முக்கியமான படமாகவும் அமைந்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் 40-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் த்ரிஷா பொன்னியின் செல்வன் பட புரொமோஷன்களில் 10 வயது குறைந்தவராகவே தெரிகிறார். 20 வருடம் முன்னணி நடிகையாக வலம் வரும் இவரிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, கடமைக்காக திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு விவாகரத்து செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.

நண்பர்கள் உட்பட தனக்கு தெரிந்த பலர், மகிழ்ச்சியான திருமணத்தில் இருப்பதாகவும் சிலர் திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து செய்ய நினைப்பதாகவும் கூறினார். ஆகையால் சரியான நபரை இன்னும் சந்திக்கவில்லை என்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!