முகப்புஇன்றைய செய்திகள்இந்தியாமருத்துவர் வராததால் செவிலியர்கள் பார்த்த பிரசவத்தில் நடந்த விபரீதம் | Hosur Hospital

மருத்துவர் வராததால் செவிலியர்கள் பார்த்த பிரசவத்தில் நடந்த விபரீதம் | Hosur Hospital

ஓசூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தைக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் உறவினர்கள் கொந்தளிப்பு அடைந்தனர். கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவகுமாரின் மனைவி வசந்தாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இவர் அனுமதிக்கப்பட்டார்.

அன்று மாலை வசந்தாவிற்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவர் வராததால் அங்குள்ள செவிலியர்களே வசந்தாவிற்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்த போது குழந்தைக்கு வலது கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் உறவினர்களுக்கு தெரிவிக்காமல் உடனடியாக குழந்தையும் தாயும் செவிலியர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குழந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. சம்பவத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உத்தனப் பள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அலட்சியமாக வேலை பார்த்த செவிலியர்கள் மருத்துவர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!