October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

காவிரியை தமிழகத்தில் பாய்ந்து ஓட செய்த விநாயகரின் திருவிழாவான விநாயகர் சதுர்த்தி

காவிரியை தமிழகத்தில் பாய்ந்து ஓட செய்த விநாயகரின் திருவிழாவான விநாயகர் சதுர்த்தியில் வழிபாடு செய்து நாட்டு மக்கள் நலன் பெற வேண்டும், தருமபுரம் ஆதீன மடாதிபதி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் நட்சத்திரா குழுமத்தில் அமைந்துள்ள மேதா விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நடைபெற்ற சகஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்றார்.

தொடர்ந்து மெய் கண்டார் அறக்கட்டளைக்கு கல்வி நிதி வழங்கிய மடாதிபதி நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அகஸ்தியரால் கமண்டலத்தில் அடைத்துக் கொண்டு வரப்பட்ட காவிரியை காகம் வடிவில் வந்து விடுவித்து தமிழ்நாட்டில் பெருக்கெடுத்து ஓடச் செய்தார் விநாயகர்.

இதனால் நாடு செழித்து வளம் பெற்றது. எந்த செயலை செய்தாலும் விநாயகர் பூஜையை செய்து துவங்குவது நமது மரபாகும். இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் நாட்டு மக்கள் பாரம்பரிய முறையில் விநாயகர் பூஜை செய்து அனைத்து நலனையும் பெற செந்தமிழ் சொக்கநாதர் அருளை பிரார்த்திக்கிறேன் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

முன்னதாக தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற இரண்டாம் யாகசாலை பூஜைகளில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கல்லூரி செயலாளர் செல்வநாயகம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் குரு.சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

மயிலாடுதுறை ஆ.இளஞ்செழியன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க