முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மைசூரிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்வெட்டுகள் மூலம் தமிழர்களின் தொன்மையையும், பல புதிய தகவல்களையும் அறிய முடியும்...

மைசூரிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்வெட்டுகள் மூலம் தமிழர்களின் தொன்மையையும், பல புதிய தகவல்களையும் அறிய முடியும் – தங்கம் தென்னரசு

மைசூரிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்வெட்டுகள் மூலம் தமிழர்களின் தொன்மையையும், பல புதிய தகவல்களையும் அறிய முடியும் என மதுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

உலக மரபு வாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் தமிழக நடுகல் மரபு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் தொழில்துறை மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர், கருத்தரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில் “மனித இனம் தோற்றப்பாட்டதாக கூறப்படும் பழைய கற்காலத்தில் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் மனித இனம் தோன்றி இருக்கிறது என நிறைய ஆய்வறிக்கை கூறுகிறது, பொதுவாக நிலப்பரப்பில் ஒரு இனம் தோன்றி அதன் பண்பாட்டு தொடர்ச்சியாக முழுமை பெறாமல் ஆங்காங்கே இடைவெளிகள் இருக்கும், தமிழ் சமுதாயம் பழைய கற்காலம் தொடங்கி இரும்பு காலம், சங்க காலம் என எல்லா காலகட்டங்களில் தமிழ் சமுதாயத்தின் தொடர்ச்சி இருக்கிறது, தமிழகம் முழுதும் நடைபெறும்

அகழாய்வுகள் புதிய தரவுகளை தருகிறது, மயிலாடும்பாறையில் நடைபெற்ற ஆய்வு அடிப்படையில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பின் பயன்பாடு அறிந்த முதல் சமுதாயமாக தமிழ் சமுதாயம் இருக்கிறது, புலிமான் கொம்பு கல்வெட்டு கிடைத்த பிறகு தான் சங்க காலத்தில் நடுகல் மரபு என்பது இருந்தது உறுதி செய்யப்பட்டது, அசோகன் பிராமி எழுத்து மூலமாக தான் தமிழி எழுத்துகள் வந்தன என கூறப்பட்ட நிலையில் கீழடி ஆய்வு முடிவில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழனுக்கு தனியாக ஒரு எழுத்து முறை இருந்தது கண்டறியப்பட்டது, நடுகற்கள் அரசனை கொண்டாடும் கல்வெட்டுகளாக இல்லை, போரில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வீரனின் நினைவை போற்றும் வகையில் மக்கள் நடுகற்கள் வைத்து வணங்கி வந்தனர், தமிழகத்தில் முன்னோர்களை நடுகற்கள் வைத்து இன்று வரை வழிபட்டு வருகின்றனர்

தமிழகத்தின் வரலாற்றை கல்வெட்டுகள், சங்க கால நாணயங்கள், அகழாய்வு மூலமாக அறிய முடிகிறது, விவசாயத்தை காப்பாற்றிய வீரனுக்கு கூட தமிழ் சமுதாயம் நடுகற் எடுத்து வணங்கி வருகின்றனர், அகழாய்வு பழம் பெருமைகளை பேசுவதற்க்காக அல்ல தமிழ் சமுதாயம் எழுத்து, கல்வி, பொருளாதாரத்தில் சிறந்து விளங்கியது என்பதை எடுத்துகாட்டுதற்காகவே, தமிழ் சமுதாயம் வரலாற்றை வெளிக் கொணர முதல்வர் உறுதுணையாக இருக்கிறார்

மன்னர் திருமலை நாயக்கர் மஹாலை புணர் அமைக்க 13 கோடி நிதி ஒதுக்கிடு, தமிழகத்தில் உள்ள குடவரை கோவில்கள், கோட்டைகள் பராமரிக்கப்பட உள்ளது” என பேசினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில் “மைசூரிலிருந்து சென்னை வந்துள்ள கல்வெட்டுகள் அளவிடும் பணிக்கு நடைபெறுகிறது, மைசூரில் வந்துள்ள கல்வெட்டுகள் நல்ல நிலையில் உள்ளது, மைசூரில் வந்துள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, மத்திய தொல்லியல் துறையுடன் இனைந்து கல்வெட்டு ஆய்வு செய்ய தயாராக உள்ளது, மைசூரில் இருந்து வந்துள்ள கல்வெட்டுகள் மூலம் தமிழர்களின் தொன்மையையும், பல புதிய தகவல்களையும் அறிய முடியும், தமிழகத்தில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன என ஒரு ஒருங்கிணைந்த ஆய்வு செய்யப்பட உள்ளது

கீழடி அருங்காட்சியகம் கட்டடப் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து உள்ளது, கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்களை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தும் பணிகள் நடத்த 2 மாதங்கள் ஆகும், கீழடி அகழாய்வில் 12 ஆயிரத்தும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன, அதில் மிக முக்கியமான பொருட்களை காட்சிப்படுத்தப்படும், அதன் பின்னர் கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைப்பார், கீழடி அகழாய்வு தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது, கீழடியில் தேவைப்பட்டால் அடுத்த கட்ட அகழாய்வு கடந்த கால அகழாய்வின் முடிவுகளின் அடிப்படையில் தொடங்கப்படும், கீழடி மட்டுமல்லாமல் வைகை கரை நாகரீக பகுதிகளில் அகழாய்வை விரிவுபடுத்தப்படும்” என கூறினார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!