முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்அரசு மற்றும் ஐ.டி.ஐ., நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மூதாட்டியிடம் 47 லட்சம் ரூபாய் மோசடி.

அரசு மற்றும் ஐ.டி.ஐ., நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மூதாட்டியிடம் 47 லட்சம் ரூபாய் மோசடி.

மதுரை பி.பி.குளம், முல்லை நகர், நேருஜி தெருவை சேர்ந்த பால்பாண்டி மனைவி மல்லிகா (வயது 70). இவரது மகன் படித்து முடித்துவிட்டு ,வேலை தேடிக் கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் மதுரை சோழவந்தான், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பவர், மல்லிகாவிடம் தனக்கு தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள் பலரை தெரியும். அரசு ஐடிஐ நிறுவனத்தில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. இதற்கு பரீட்சை எழுத வேண்டியது இல்லை உடனடியாக வேலை நியமன கடிதம் கிடைத்துவிடும் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

அதற்கு செந்தில்குமார், குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்று தெரிவித்து உள்ளார்.

அப்போது 47 லட்சம் பணம் கொடுத்து வேலை வாய்ப்பு பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மல்லிகா கடந்த 2017-ம் ஆண்டு முதல் செந்தில் குமாரிடம் படிப்படியாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வந்து உள்ளார்.

மல்லிகா சொத்துக்களை விற்று பணம் புரட்டி செந்தில் குமாரிடம் ஒப்படைத்து உள்ளார். இதுவரையில் 46 லட்சத்தை 66 ஆயிரத்து 820 ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது.

இருந்த போதிலும் செந்தில்குமார் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்தபடி, வேலை வாங்கித் தரவில்லை. எனவே மல்லிகா அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு அவர் திருப்பி தர மறுத்து விட்டார்

எனவே மல்லிகா இது தொடர்பாக மதுரை மாநகர குற்ற பலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

செந்தில்குமரன் வழக்கு பதிவு செய்து, மூதாட்டி மல்லிகாவிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 46 லட்சத்து 66 ஆயிரத்து 820 ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் குமாரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!