முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்தீர்ப்பின் மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா எடப்பாடியிடம் தான் உள்ளது- உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற தீர்ப்பு...

தீர்ப்பின் மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா எடப்பாடியிடம் தான் உள்ளது- உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற தீர்ப்பு என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து மதுரையில் முன்னாள் அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை எம்ஜிஆர் தொடங்கி தொடர்ந்து வெற்றி சிம்மாசனத்தில் அமர்த்தினார்.
தொடர்ந்து அதிமுகவை ஜெயலலிதா மூன்றாவது மக்கள் இயக்கமாக மாற்றினார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லாத நிலையை ஜெயலலிதா உருவாக்கினார்.

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக எனும் மகத்தான மக்கள் இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி காப்பாற்றி, ஜெயலலிதா, எம்ஜிஆர் கனவுகளை நிறைவேற்றி வழிநடத்தினார்.

ஒன்றரை கோடி தொண்டர்களை ஒருங்கிணைத்து ஜெயலலிதாவின் கனவை நனவாக்கினார்.

தன்னை அர்ப்பணித்து நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை நடத்தினார். பல்வேறு சாதனைகளை செய்து மக்கள் நெஞ்சங்களில் நிறைந்த தலைவராக எடப்பாடி திகழ்கிறார்.

தாய்தமிழ் நாட்டு மக்கள் பாதுகாவலரான எடப்பாடிக்கு நீதியரசர்கள் தந்த மகத்தான தீர்ப்பு.

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மா எடப்பாடியிடம் உள்ளது என்பதை காட்டும் வகையில் நீதிபதிகள் கொடுத்தது தான் இந்த தீர்ப்பு.

இந்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது. கிளைக்கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை எடப்பாடிக்கு ஆதரவு உள்ளது.

அதிமுகவின் பெருமைகளை கட்டிக்காக்க தொண்டர்கள் தயாராக உள்ளார்கள்.

எடப்பாடியின் நல்ல நோக்கத்திற்காக கிடைத்த தீர்ப்பு.

இந்த தீர்ப்பு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா எடப்பாடியிடம் உள்ளது என்பதை காட்டுகிறது.

மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கிற எடப்பாடியாருக்கு கிடைத்த வெற்றி. அவரின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி.

வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக வெற்றியடையும் என மக்கள் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

நியாயம், சத்தியம்,தர்மம், உண்மை தொண்டர்கள் பக்கம் நின்று கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு.

நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி தீர்ப்பு. பொதுக்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 99 சதவீதம் பேர் எடப்பாடி கரத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளது. எடப்பாடியின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் வயையில் இந்த தீர்ப்பு உள்ளது.

எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

ஒரு இயக்கம் ஒரு தலைவருக்கு தன்னிச்சையாக தருகிற ஆதரவு போல எடப்பாடிக்கு தான் உண்டு.

இது இறுதி தீர்ப்பா என்கிற கேள்விக்கு,

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. இந்த தீர்ப்பு மூலம் வெட்ட வெளிச்சாக தெரிகிறது. அறிந்தும் அறியாதது போல, தெரிந்தும் தெரியதது போல உள்ளவர்களை ஒன்றும் செய்ய முடியது.

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மக்கள் பணியாற்ற தயாராக உள்ளது.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!