முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்நவீன குறைதீர்க்கும் மையத்தின் புதிய தொலைபேசி எண் மற்றும் மென்பொருள் சேவையினை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்...

நவீன குறைதீர்க்கும் மையத்தின் புதிய தொலைபேசி எண் மற்றும் மென்பொருள் சேவையினை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் ஏற்கனவே பொதுமக்கள் குறைகளை தீர்க்க தொலைபேசி கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதை நவீன முறையில் மாற்றியமைத்து கண்காணிப்பு குறைதீர்க்கும் மையத்தின் புதிய தொலைபேசி எண் மற்றும் மென்பொருள் சேவையினை மேயர் இந்திராணி பொன்வசந்த்,
ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங்,ஆகியோர் முன்னிலையில் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை மாநகராட்சியின் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம், மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் முகாம் மற்றும் சிறப்பு முகாம்களில் மனுக்கள் கொடுத்து. வருகின்றனர். தற்போது உள்ள புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு புதிய தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண். +91 787 166 1787 என்ற புதிய எண் இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி அழைப்பு மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் மற்றும் www.mducorpicts.com என்ற மதுரை மாநகராட்சி இணையதளம் மூலமாக தங்களது தொலைபேசி எண் மூலம் பதிவு செய்து புகார் தெரிவிக்கலாம். புகார் பதிவு செய்யப்பட்டவுடன் புகார் ஒப்புகை எண் ஒன்று உருவாக்கப்பட்டு பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அந்த ஒப்புகைஎண் மூலமாக புகாரின் நிலையை Online-ல் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். புகார்கள் பதிவு செய்யப்பட்டவுடன் தானியங்கி முறையில் புகாரின் வகைக்கு ஏற்ப மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகாரின் விபரங்கள் தெரிவிக்கப்படும். பெறப்பட்ட புகார்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்கப்படவில்லை எனில் அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களுக்கு புகார்கள் அனுப்பப்படும். புகார்கள் நிறைவடையவில்லை எனில் ஆணையாளரின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு பதில் அளிக்க ஏதுவாக ICTS Mobile App & இணையதளத்தில் Login ID / Password மாநகராட்சி அலுவலர்கள் பயன்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களுக்கு நடவடிக்கை எடுத்ததற்கான பதில் அறிக்கையினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவுடன் பொதுமக்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். பொதுமக்கள் தாங்கள் அளித்த புகார் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பதிலை தெரிந்து கொண்டு பதில் திருப்திகரமாக இருந்தால் அவர்கள் நட்சத்திர மதிப்பீடு மூலமாக கருத்துக்களை பதிவு செய்யலாம். இந்த நிகழ்வில் மாநகராட்சி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!