முகப்புகல்வி & வேலைகல்விமதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்வி கடன் மேளா- அமைச்சர்கள் மற்றும் மதுரை எம்பி பங்கேற்பு

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்வி கடன் மேளா- அமைச்சர்கள் மற்றும் மதுரை எம்பி பங்கேற்பு

ஒவ்வொரு கல்வி ஆண்டும் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் மேலா நடைபெற்று வருகிறது அதன்படி,கடந்த ஆண்டு கல்வி கடன் வழங்கும் மேளாவில் 119 கோடியே 70 லட்சம் கல்வி கடன் மாணவர்களுக்கு வழங்கி தமிழகத்தில் முதல் இடமாகவும் இந்தியாவில் முதன்மை மாவட்டமாகவும் மதுரை மாவட்டம் மாறியது.

அதனை தொடர்ந்து இன்று அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மதுரை மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான கல்வி கடன் மேளா 2வது கட்டமாக மதுரையில் நடைபெற்றது.
இந்த முகாமில் மாணவ மாணவியர்களுக்கு மருத்துவம்,பொறியியல் இதர தொழில் படிப்புகள்,கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பிற படிப்புகளுக்காக வங்கிகளில் கல்வி கடன் பெறுவது தொடர்பான தகவல்கள்,வழிமுறைகள், சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வழங்க ஏதுவாக அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை சார்பில் பல்வேறு வங்கிகள் இந்நிகழ்வில் பங்கேற்று இருந்தன.

இந்த நிகழ்வை வணிகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி,மனித வளம் மற்றும் நிதி அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் எஸ். அனிஸ் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இந்த முகமானது காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற பயன்பெற்று கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டு தேவையான வங்கிகளை அணுகி கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கான காசோலைகளை அமைச்சர்கள் இன்று வழங்கினார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!