Friday, August 12, 2022
Friday, August 12, 2022
spot_img
spot_img

மதுரையில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி மக்கள் குறை தீர் கூட்டத்தில் மேயரிடம் திமுகவினர் வாக்குவாதம்

மதுரை மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது பகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியான, கூடல்நகர், ஆனையூர், கலைநகர், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் அம்ரூத் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளால் பல மாதங்களாக சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், மாணவர்கள் பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாமல் பணிகள் முடங்கியுள்ளதாகவும் மேயர் முன்பாக புகார் அளித்தனர்.

மேலும் தங்களது பகுதிகளுக்கு குடிநீர் லாரிகள் கூட வரமுடியாத நிலையில் பொதுமக்கள் அவதியுறுவதாக கூறினர்.

இதனை தொடர்ந்து திமுகவினர் சிலர் தங்களது வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்ய முடியவில்லை எனவும், பணிகளை விரைவாக முடிக்காத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தத்தாரர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்க கோரி மேயரிடம் முறையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் நடைபெறும் அனைத்து குறைதீர் கூட்டங்களிலும் பொதுமக்களோடு சேர்ந்து திமுக கவுன்சிலர்களும், திமுகவினருமே தங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மேயரிடம் முறையிடுவது போன்ற நிலை நீடித்துவருகிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த குறைதீர்முகாமில் துணைமேயர் நாகராஜ், மண்டல தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க