Friday, August 12, 2022
Friday, August 12, 2022
spot_img
spot_img

மின் கட்டண உயர்வு மற்றும் உணவுபொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசுகளின் மின் கட்டண உயர்வு மற்றும் உணவுபொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் மத்திய, மாநில அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் உணவுப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் ஜலபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளரும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ராஜா பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராசிமதி ,மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜகுமார், சாரங்கபாணி, கனிமொழி நகர செயலாளர்கள் பண்ணை பாலு , சி.டி பாண்டியன் ஒன்றிய செயலாளர்கள் பாக்கம் சிவா, பிரபு, ராமலிங்கம், ராஜசேகர், முகமது நவ்பர் , ஆல்பர்ட் பேரூராட்சி செயலாளர்கள் பாலா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் திருஞானம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், மாவட்ட தொண்டர் அணி துணை செயலாளர் செந்தில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, துணைச் செயலாளர்கள் பூங்கோதை, அஸ்மத் பஜானா மற்றும் கலாநிதி , கே.எஸ் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர். தேமுதிகவினரின் ஆர்ப்பாட்டத்தை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க