முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில்...

மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற நவராத்திரி உற்சவ விழா இன்று கோலாகலமாக துவங்கி வரும் அக்டோபா் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் போது நாளொதொரும் பல்வேறு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

முதல்நாள் விழாவான இன்று அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்பு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நவராத்திரி உற்சவ நாள்களில் மீனாட்சியம்மன் மூலவர் சன்னிதியில் அபிஷேகம், அலங்காரம், அா்ச்சனைகள் போன்றவை நடத்தப்படமாட்டாது என்பதால், கொலு மண்டபத்தில் (உற்சவர்) அலங்காரத் தில் எழுத்தருளும் அம்மனுக்கு தேங்காய் உடைப்பு அா்ச்சனைகள் செய்யப்பட்டது.

நவராத்திரி விழாவையொட்டி திருக்கல்யாண மண்டபத்தில், பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் கொலு அலங்கார பொம்மைகள் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடா்பான பொம்மைகள் மற்றும் இதர பொம்மைகள் கொலுச்சாவடியில் கொலுவாக வைத்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனையும், சுவாமியை தரிசனம் செய்து கொலு வையும் பார்த்து ரசித்து சென்றனர்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!