fbpx
Friday, January 21, 2022
Homeமாவட்டங்கள்திருவாரூர்திருவாரூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகா...

திருவாரூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகா சார்பில் கண்டன ஆர்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம் என் கண்ணில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நான்கு அர்ச்சகர்கள் தற்காலிகமாக பணி புரிந்தவர் கூடிய சூழ்நிலையில் புதிதாக ஒரு அர்ச்சகரை நியமித்திருப்பதை கண்டித்து திருவாரூர் மாவட்ட  அகில பாரத இந்து மகா சபா சார்பில் திருவாரூர் புதுத்தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம்,அகில பாரத இந்து மகா சபா ஆலய பிரிவு மாநிலத் தலைவர் ராம நிரஞ்சன் தலைமையிலும், அகில பாரத இந்து மகா சபா திருவாரூர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் கடந்த பத்து வருடமாக எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாத போதும் இந்த கோவிலுக்காக பாடுபட்ட அர்ச்சகர்களுக்கு துரோகம் செய்துவிட்டு உடனடியாக ஒருவரை நியமித்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஆலய மண்டப கட்டுமான பணி,குத்தகை வசூல் என்று பல பிரச்சினைகள் இருக்கும்போது,அவசரகதியில் அர்ச்சகருக்கு பணி நியமன ஆணை வழங்கி இருப்பது ஏன் என்பது குறித்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அகில பாரத இந்து மகா சபா ஆலய பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன், என்கண் ஆலயத்தில் ஏற்கனவே நான்கு பேர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் அர்ச்சகராக இருக்கும் பொழுது, மேலும் ஒருவரை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு நேரடியாக அவருக்கு பணி நியமன ஆணை வழங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் சிலர் கூறுகிறார்கள், இத்தகைய செயலை அகில பாரத இந்து மகா சபா வன்மையாக கண்டிக்கிறது, தமிழக முதல்வர் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர் என்று கூறி வரக் கூடிய நிலையில்,இது போன்று லஞ்சம் வாங்கிக் கொண்டு அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுவது என்பது கண்டனத்துக்குரியது இது சரி செய்யப்படவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம் என்று கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, மயிலாடுதுறை,திருவாரூர் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: Elavarasan – thiruvarur

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்