முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்பாஸ்போர் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர்-...

பாஸ்போர் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர்- மதுரைக்கிளை

பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பாஸ்போர் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர்- மதுரைக்கிளை

சுரேஷ் குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “2013ஆம் ஆண்டு பெறப்பட்ட எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த போது காவல்துறையினர் என் மீது குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்தனர். நசுருதீன் என்பவர் மீதான வழக்கில் எனக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டு இதுபோல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நசுருதீன் என்பவர் எனது பயண ஏஜென்ட் மட்டுமே அவருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆகவே எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுதாரர் மீது எவ்வித குற்றமும் இல்லை என ஒரு கியூ பிரிவு காவல்துறையினர் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.

மனுதாரருக்கான நிவாரணம் வழங்கப்பட்டாலும், 2019ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த சிலரும், இந்தியாவைச் சேர்ந்த சிலரும் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்டுகள் பெற்ற வழக்கு தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டது. இது தொடர்பாக கியூ பிரிவினர் தரப்பில் காவல்துறை அலுவலர்கள் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி உட்பட 41 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தேசத்தின் பாதுகாப்பு தொடர்பானது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் கியூ பிரிவு காவல்துறையினர் 3 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. அதன் பின்னர் ஆறு மாதங்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது குற்றமில்லை என்பது உறுதி ஆனதால் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிடப்படுகிறது.

அதேசமயம் பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர்.

அதோடு இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பேசிய பாஜகவின் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுவது. அவர் இல்லையெனில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!