முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் சகதியில் சிக்கி பலி

மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் சகதியில் சிக்கி பலி

மதுரை கூடல் புதூர் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் மதுரை மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின் இதுவரை பாதாள சாக்கடை அமைக்கப்படாத இடங்களில், மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சி மண்டலம் இரண்டுக்கு உட்பட்ட பகுதியில் மூன்று ஒப்பந்த தொழிலாளர்கள் இன்றைய தினம் பாதாள சாக்கடை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வந்தனர். இதற்காக பள்ளம் தோன்டும் பணியின் போது மேலே உள்ள மண் சரிந்து பணியில் ஈடுபட்டவர்கள் மேலே விழுந்தது. இந்த விபத்தின் போது இருவர் தப்பிய நிலையில் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற ஒப்பந்த தொழிலாளர் மண் சரிவில் சிக்கி பலியானார்.

இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத சூழ்நிலையில் இது போன்ற விபத்து ஏற்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!