முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு தொடரும் எதிர்ப்பு

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு தொடரும் எதிர்ப்பு

சென்னையை அடுத்த பரதூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேறியது. கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு காஞ்சிபுரம் மாவட்டம் பரதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 4563 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 70% பகுதி விளைநிலங்களாக இருப்பதாக கூறும் கிராம மக்கள் பரதூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களது போராட்டம் நூறாவது நாளை எட்ட உள்ளது. இந்த நிலையில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் ஏகனாபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் கூடியது. பஞ்சாயத்து தலைவர் கிராம நிர்வாக அலுவலர் உதவி வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் பரதூர் விமான நிலையத்தை எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதே போல பரந்தூர், வளத்தூர், பொடவூர், நெல்வாய், தண்டலம், மாடபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பருந்தூர் விமான நிலையத்தால் விவசாயிகள் விவசாய நிலங்கள் நீர்நிலை பாதிக்கப்படும் என கவலை தெரிவித்த கிராம மக்கள் அரசு அறிவித்துள்ள ஒப்பீடு வெறும் கண் துடைப்பு என்றனர்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தில் விமான நிலையம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெரிவித்த நிலையில் விவசாயி இயக்கங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து போராட்டத்தை தீவிர படுத்த கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!