Nayanthara: விக்னேஷ் சிவனை விட நயன்தாரா இத்தனை வயசு மூத்தவரா... தேடி தேடி பார்க்கும் நெட்டிசன்ஸ்!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனை விட எத்தனை வயது மூத்தவர் என்பதை ரசிகர்கள் அறிய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். நடிகை நயன்தாரா ஏற்கனவே நடிகர் சிம்புவை காதலித்து வந்தார் பிறகு அந்த காதல் தோல்வியில் முடிந்தது இருவரும் பிரிந்தனர்.
பிறகு இயக்குனரும் மற்றும் நடிகருமான டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா. அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. நானும் ரவுடிதான் படத்தின் கதையை சொல்ல போன இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இடையில் காதல் மலர்ந்தது.
இந்த நிலையில்தான் ஒருவழியாக நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடிகை நயன்தாரா தனது கழுத்தில் இருந்த தாலியை கையில் எடுத்து பார்த்து பூரித்துப் போனாராம். நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கூகுளில் அதிகம் தேடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு ஆண்டுகளாக காதலித்து லிவிங் டுகெதரில் ஒன்றாக வசித்து வந்தனர். அடிக்கடி வெளிநாட்டு சுற்றுலா மற்றும் கோவில் கோவிலாக வழிபாடு செய்து வந்தனர். நயன்தாராவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறி பல பூஜைகளையும் செய்து வந்துள்ளார்.
விக்னேஷ் சிவனை விட ஒரு வயது மூத்தவர் நயன்தாரா. நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி பிறந்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி பிறந்துள்ளார். விக்னேஷ் சிவனுக்கு 36 வயது ஆகிறது. நயன்தாராவுக்கு 37 வயதாகிறது. இதைதான் ரசிகர்கள் பலரும் கூகுளில் தேடி வருகின்றனர்.