logo

திண்டுக்கல் நகரே திருவிழாகோலமாக காட்சியளித்த கலர்ஸ் தமிழின் பிரமாண்ட வள்ளி திருமண வரவேற்பு விழா

 | 
ValliThirumanam

புகழ் பெற்ற பொழுதுபோக்குச் சேனலான கலர்ஸ் தமிழில் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் நெடுந்தொடர் நிகழ்ச்சியான வள்ளி திருமணத்தின் முதன்மை கதாபாத்திரங்களான வள்ளி ( நடிகை நட்சத்திரா நடிப்பில் ) மற்றும் கார்த்திக் ( நடிகர் ஷ்யாம் நடிப்பில் ) ஆகியோரின் சிறப்பான திருமண நிகழ்வைத் தொடர்ந்து , ஜுன் 18 சனிக்கிழமையன்று  திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற திருமண வரவேற்பு விழாவில் சுமார் 2500 மேற்பட்ட பார்வையாளர்கள், கலர்ஸ் தமிழை சார்ந்த நட்சத்திரப் பட்டாளங்கள் 21 - க்கும் அதிகமான நடிகர்களும் மற்றும் 100 நாட்டுப்புற கலைஞர்களும் கோலாகலமாக பங்கேற்று கொண்டாடியதால் திண்டுக்கல் நகரே திருவிழா கோலமாக காட்சியளித்தது.

ValliThirumanam 4

தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல் துறையில் இந்த அளவுக்கு பிரமாண்டமாக திருமண வரவேற்பு விழா
நடைபெறுவது முதன் முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு நிகழ்வாகும் . தொன்மையான தமிழ் இலக்கியத்தில் மிகச்சிறந்த காதல் கதைகளுள் ஒன்றான முருகப்பெருமான் மற்றும் வள்ளி ஆகியோருக்கு இடையிலான காதலையும் , திருமண நிகழ்வையும் , தற்காலத்திய , நவீன திருப்பத்துடன் மறுஉருவாக்கம் செய்யும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது இந்த நெடுந்தொடர் . 

ValliThirumanam 2

தான் காதலிக்கும் கார்த்திக்கை அடைவதற்கு வள்ளி  மேற்கொள்ளும் தளராத முயற்சிகளையும் மற்றும்    இறுதியில் அதற்கு கிடைத்த வெற்றியையும் வள்ளி திருமணம் சுவையாக சித்தரிக்கிறது . திருமண தம்பதியர் வள்ளி மற்றும் கார்த்திக் , அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமர்ந்திருக்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஜுன் 17 ம் தேதி -- வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஊர்வலத்தோடு , இத்திருமண வரவேற்புக் கொண்டாட்டம் அமர்க்களமாகத் தொடங்கியது . 

ஒட்டச்சத்திரம் - திண்டுக்கல் சாலை செக் போஸ்டிலிருந்து தொடங்கி , பெரியார் சாலை வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் 100 நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்றனர் . பொய்க்கால் குதிரையாட்டம் , ஒயிலாட்டம் , புலியாட்டம் , சிலம்பாட்டம் மற்றும் மயிலாட்டம் என பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இந்நிகழ்வில்  அரங்கேறியது. 

ValliThirumanam 3

இது சாலையில் நின்றிருந்த பார்வையாளர்களை பரவசப்படுத்தியது .  திருமண வரவேற்பு நிகழ்விற்கு வந்து மணமக்களை வாழ்த்துமாறு பாரம்பரியமான மஞ்சள் பத்திரிகை திண்டுக்கல் நகர் முழுவதும் உள்ள மக்கள் அணைவருக்கும் வினியோகிக்கப்பட்டது .   இந்நிகழ்ச்சியை நடிகை ஃபரீனாவும் , விஜே .அன்சரும் தொகுத்து வழங்கினர் . பார்வையாளர்களோடு கலந்துரையாடி மகிழ்வித்ததோடு , இந்த மாலைநேர நிகழ்விற்கு வருகை தந்த விருந்தினர்களை அன்போடு அவர்கள் வரவேற்றனர் . 

ValliThirumanam 1

தங்கள் அபிமான நடிகர்களான வள்ளி ( நடிகை நட்சத்திரா ) மற்றும் கார்த்திக் ( நடிகர் ஷ்யாம் ) , வடிவு ( நடிகை நளினி ) , வசுந்தரா ( நடிகை காயத்ரி ஜெயராமன் ) மற்றும் அர்ஜுன் ( நடிகர் விஷ்ணு விஜய் ) ஆகியோரோடு இன்னும் பல நடிகர்களை நேரடியாகப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு மகிழ்ச்சியளித்தது . பார்வையாளர்களுக்கு இந்நிகழ்விற்காக வந்திருந்த நடிகர் , நடிகையர் , புதுமண தம்பதியரான வள்ளி மற்றும் கார்த்திக்கை வாழ்த்தியதோடு , சிறப்பான நடன நிகழ்ச்சிகளையும் வேடிக்கையான விளையாட்டுகளில் அரங்கேற்றினர் . பார்வையாளர்களையும் ஈடுபடுமாறு செய்ததுடன் , காதல் ரசம் சொட்டும் இனிமையான பாடல்களையும் பாடி , வந்திருந்தோரை அவர்கள் மகிழ்வித்தனர் . கலர்ஸ் தமிழ் பிசினஸ் ஹெட் திரு .S.ராஜாராமன் திண்டுக்கல் நிகழ்ச்சி  பற்றி பேசுகையில் , மக்களிடமிருந்து எங்களுக்கு திண்டுக்கல் நகரில் எப்போதுமே மனதை நெகிழ வைக்கும் வரவேற்பு கிடைத்திருக்கிறது . எங்களது நெடுந்தொடர் நிகழ்ச்சிகளுக்கு நேர்மறையான விமர்சனமே எப்போதும் கிடைத்து வருகிறது . ஆகவே , இந்த மாபெரும் திருமண வரவேற்பு விழாவை இந்நகரில் நடத்த வேண்டுமென்பது எங்களது எண்ணமாக இருந்தது . 

ValliThirumanam 5

ஒரு நெடுந்தொடர் நிகழ்வில் இடம் பெறுமாறு இந்த அளவிற்குப் பெரியதாக ஒரு நிகழ்வை பொது பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த ஒரு சேனல் ஏற்பாடு செய்வது இதுவே முதல் முறையாகும் . இதற்காக நடத்தப்பட்ட ஊர்வலமும் , திருமண வரவேற்பு விழாவும் பிரமாதமாக நடந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் . எமது பார்வையாளர்களோடு எங்களது உறவை வலுப்படுத்தும் அதே வேளையில் , இந்நிகழ்வானது எங்களது தனித்துவமான கருத்தாக்கங்களில் ஒன்றை பலரும் அறியுமாறு காட்சிப்படுத்த வேண்டுமென்ற ஒரு நோக்கத்தையொட்டியதாக அமைகிறது . கதாபாத்திரமாக வள்ளி , தமிழ்நாட்டின் கலாச்சார பின்புலத்தோடு , ஆழமான பிணைப்பைக் கொண்டிருக்கிறார் .

ValliThirumanam 6

ஆகவே , இந்நிகழ்வை நாங்கள் திண்டுக்கல்லில் நடத்த வேண்டுமென்பது விரும்பி தேர்வு செய்த எடுத்த முடிவாகும் . திருமணம் என்ற இக்கதை வள்ளித் எண்ணற்ற பார்வையாளர்களால் பாராட்டப்படுகிறது . பெரிதும் ரசித்துப் இனிவரும் காலத்திலும் ரசிகர்களுக்கும் , பொதுமக்களுக்கும் வியப்பை வழங்கும் பல திட்டங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம் , " என்று கூறினார் . வள்ளி திருமணம் தொடரின் குடும்பத்தினரோடு இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து நட்சத்திரங்களும் ஒன்று சேர்ந்து நடனமாடி , தாங்கள் மகிழ்ந்ததோடு , பார்வையாளர்களையும் பரவசத்தில் ஆழ்த்தி இந்நிகழ்வை நிறைவு செய்தனர் .

ValliThirumanam 7

Around The Web

Latest News

You May Like

Featured