logo

அரசியலில் களமிறங்கும் நடிகை திரிஷா! எந்த கட்சியில் தெரியுமா?

 | 
trisha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. நடிகை திரிஷா துணை கதாபாத்திரத்தில் சிம்ரன் மற்றும் பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிம்பு நடித்த அலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் விஜய்சேதுபதியுடன் நடித்த 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜானு கதாபாத்திரம் மக்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்து வருகின்றது.

இந்த நிலையில்தான் தற்போது நடிகை குஷ்பூ போல நடிகை த்ரிஷாவும் தேசிய அளவிலான அரசியல் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, மேலும் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் கட்சியை பலப்படுத்த நடவடிக்கையில் இறங்குவார் என  தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Around The Web

Latest News

You May Like

Featured