நடிகையின் கலெக்டர் கனவு! கனவுக்கு கைக்கொடுக்கும் ஜெய்!!

தமிழ் சினிமாவில் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதைத்தொடர்ந்து சுப்பிரமணியம் சரோஜா என பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். தற்போது பட்டாம்பூச்சி என்ற படத்தில் நடிகர் ஜெய் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் நடிகர் ஜெய் புதிய அவதாரமாக வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான் ஒரு நடிகையின் ஆசையை நிறைவேற்ற உதவி செய்துள்ளார். களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த மனிஷா பிரியதர்ஷினி. இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். இவருக்கு கலெக்டர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தில் படித்து வருகிறார்.
படிப்பில் கெட்டிக்காரராக விலகுகிறார் மனிஷா பிரியதர்ஷினி. இவர் தற்போது சட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். நடிகை மனிஷா பிரியதர்ஷினியின் தாயின் கனவு தன் மகளை கலெக்டர் ஆக வேண்டும் என்று.
இந்நிலையில்தான் யுபிஎஸ் தேர்வுக்கு தயாராக புத்தகங்களை வாங்கி தருமாறு நடிகர் ஜெய்க்கு மனிஷா பிரியதர்ஷினி தாயார் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
நடிகர் ஜெய் அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்து மனிஷா பிரியதர்ஷினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .