முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்பாஸ்போர்ட் ஊழல் குற்றச்சாட்டிற்கு சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

பாஸ்போர்ட் ஊழல் குற்றச்சாட்டிற்கு சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

முன்னாள் மதுரை போலீஸ் கமிஷனரும், தற்போதைய உளவு பிரிவு கூடுதல் காவல் தலைவருமான டேவிட்சன் தேவாசீர்வாதம், உதவி ஆணையர் சிவக்குமார், அவனியாபுரம் காவல் எழுத்தர் கந்தசாமி ஆகியோர் மீது சாட்டப்பட்டுள்ள பாஸ்போர்ட் ஊழல் குற்றச்சாட்டிற்கு சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிறிஸ்தவர் மக்கா களம் சார்பில் கோரிக்கை

மதுரையில் அனைத்து கிறிஸ்தவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் தொடர்பாக போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என கூறினார்.

மதுரைபழங்காநத்தத்தில் உள்ள கிறிஸ்தவ கூட்ட சபையில் ஆலோசனைக் கூட்டமாக நடந்தது.

இக்கூட்டத்திற்கு அனைத்து கிறிஸ்தவ மக்கள் களம் தலைவர் செபாஸ்டின் சூசைராஜ் தலைமை வகித்தார். பீட்டர் சகாயம் முன்னிலை வகித்தார். மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர

இதில் சராசரி பொதுமக்களையும் பாதிக்கும் வகையில் கேஸ் உள்ளிட்ட மத்திய அவசிய பொருட்கள் விலை உயர்வை குறைக்க வேண்டும். ஏழை நடுத்தர மக்கள் பயன்படுத்தும் அரிசிக்கும் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். முன்னாள் மதுரை போலீஸ் கமிஷனரும், தற்போதைய உளவு பிரிவு கூடுதல் காவல் தலைவருமான டேவிட்சன் தேவாசீர்வாதம், உதவி ஆணையர் சிவக்குமார், அவனியாபுரம் காவல் எழுத்தர் கந்தசாமி ஆகியோர் மீது சாட்டப்பட்டுள்ள பாஸ்போர்ட் ஊழல் குற்றச்சாட்டிற்கு சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிறிஸ்தவ போதகர்களுக்கு தனி நல வாரியம், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பிற்கு சிறப்பு காவல் பிரிவு அமைக்க வேண்டும். சிஎஸ்ஐ முன்னாள் பிஷப் ஜோசப் மீது சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!