முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஆர்பி உதயகுமார் அடிப்படை புரிதல் இல்லாமல் பொதுவெளியில் பொய்களை கட்டவிழ்த்து...

10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஆர்பி உதயகுமார் அடிப்படை புரிதல் இல்லாமல் பொதுவெளியில் பொய்களை கட்டவிழ்த்து விடலாமா ?

“தற்போது மின்வாரியத்திற்கும்,மாநகராட்சிக்கும் செல்லக்கூடிய மின் கட்டணம்,சொத்து வரியின் மூலம் எப்படி கடந்த ஆண்டின் வருவாய் பற்றாக்குறையை குறைத்திருக்க முடியும்? “

10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஆர்பி உதயகுமார் அடிப்படை புரிதல் இல்லாமல் பொதுவெளியில் பொய்களை கட்டவிழ்த்து விடலாமா ?

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி

லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிகப்படியான வழக்குகள் குவிந்து வருகின்றன விரைவில் முன்னாள் அமைச்சர்கள் விளைவுகளை சந்திப்பார்கள் என மதுரையில் நிதியமைச்சர் பேட்டி

மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சரும், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை பாண்டி பஜார் பகுதியில் அமைந்துள்ள எம்.சி பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட முகாமினை தொடங்கி வைத்தார். கடவுளின் குழந்தைகள்” என வர்ணிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுடன் தனது அன்பைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்துதனது மத்திய சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் உருவாக்கப்பட்ட திட்டங்களை தொடங்கிவைத்தார். குறிப்பாக, மதுரை மாநகராட்சி வார்டு 51 கிருஷ்ணன் கோவில் தெருவில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலை, வார்டு 75 வசந்தநகர் 2வது தெருவில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலை, வார்டு 22 கணேசபுரம் தெரு வில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட *புதிய பேவர் பிளாக் சாலை திட்டங்களை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து நிதி அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,
*மாற்றுத்திறனாளிகள் துறையை உருவாக்கியவர் முதல்வரே கலைஞர் அவர்கள் தான் அதனை தலைவர் அவர்களே நேரடியாக கண்காணிப்பில் வைத்துமுதல்வரே தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.

அரசினுடைய முக்கிய திறமை என்னவென்றால் மனித நேயம், செயல் திறன், எதை எடுக்கிறோமோ அதை ஒழுங்காக முடிக்க வேண்டும். மக்கள் அனைவருக்கும் எந்த வகையில் அரசு உதவி செய்ய முடியும் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டவர் , திறன் நின்று பாதிக்கப்பட்டோர், சமுதாயத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உள்ள அடக்குமுறைகளால் பிற்படுத்தப்பட்டவர்கள் என இவர்களுக்கு என்ன செய்கிறோம்.
வளர்ச்சி முக்கியம் நிதி மேலாண்மை முக்கியம் அதைவிட முக்கியம் மனிதநேயம் முக்கியம் ஒவ்வொரு நாளும் அதனை செயலில் காண்பித்து உதாரணமாக இருக்கிறார் எங்கள் தலைவர் அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் துறைக்கு பகுதிக்கு கூடுதல் கவனம் செலுத்தி அதனை சிறப்பித்து பார்க்கிறோம்.
ஒரு மாதிரி முயற்சியாக பைலட் முயற்சியாக என் தொகுதியில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பல வீடுகளுக்கு நேரடியாக சென்று நானே அரசு உபகரணங்களை வீடுகளுக்கேசென்று வழங்கி வருகிறேன்,

*அதே போன்று மாவட்ட அளவில், கூடுதலாக மதுரை எம்பி அவர்களும் ஒன்றிய நிறுவனத்துடன் இணைந்த செயல்பாட்டிலும் கொண்டுவந்துள்ளார். அது அவரது கடமை நாடாளுமன்ற உறுப்பினர் டெல்லிக்கு அனுப்பப்பட்டு ஒன்றிய அரசின் பாராளுமன்ற விவாதங்களுக்கு , மக்களின் பிரதிநிதியாக அனுப்பப்படுகிற அவர் அந்த பணியையும் முக்கியமான பணியாக அதனையும் செயல்படுத்துகிறார்.

வளர்ச்சி, நிதி மேலாண்மை முக்கியம் என்ற போதிலும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு முகாம்கள் அமைத்து அவர்கள் நலனுக்கு மும்முரமாகப் பணியாற்றி வருகிறோம்.

எனக்கு முதல்வர் அளித்துள்ள துறைகளில் மனிதவள மேலாண்மை துறையில் தகவல் அறியும் உரிமை சட்டம், தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம், லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கொண்டுள்ளது.

இவற்றில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு இதுவரை இல்லாத அளவிற்கு நிதி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையில் பல்வேறு வழக்குகள் குவிந்து வந்துகொண்டிருக்கிறது. அதனை பொதுவெளியில் சொல்ல முடியாது விரைவில் விளைவுகளை சந்திப்பார்கள்.

அரசியலில் வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு திறமைமிக்கவர்களாக பங்கேற்று சேவையாற்றுவார்கள், அந்த வகையில் பல்வேறு நாடுகளில் உயர்பதவிகள் வகித்து அரசியலில் வந்துள்ளேன்.
தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் பொய்யான தகவல்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசி வருகிறார். குறிப்பாக அவர் ஆன்மீகவாதி என்பவர் , முன்னாள் முதல்வருக்கு கோவில் கட்டி சில ஆண்டுகள் செருப்புகூட போடாமல் அம்மையாருக்காக தவம் இருந்தவர், தற்போது அவர்களை மறந்தது போன்று உள்ளார்.
ஒரு காலத்தில் அம்மையாருக்கு விசுவாசியாக இருந்தவர் தற்போது அதுபற்றி பேசுவதில்லை தற்போது அவர் சொல்லக்கூடிய கருத்துக்கள் எல்லாம் அதிர்ச்சியாக உள்ளது ஒரு அமைச்சராக இருந்தவர் இவ்வளவு அர்த்தமற்ற, தவறான விவாதங்களை, தகவல்களை பகிர முடியுமா? இத்தனை ஆண்டுகள் அமைச்சராக இருந்ததற்கு கணக்கும் தெரியவில்லை, துறையும் தெரியவில்லை, எவ்வாறு அமைச்சராக இருந்தார் என்பதும் தெரியவில்லை. .
அறிவில்லாத விவாதமாக சென்றால் ஜனநாயகத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பாக அமையும் என்பதால் இதற்கு பதிலளிக்கிறேன்
இந்த ஆண்டு மின் கட்டண, சொத்து வரியையும் அதிகரித்ததால் பற்றாக்குறை குறைத்துள்ளது என்பது வித்தை அல்ல என்று கூறுகிறார் நான் பேசுவது சென்ற ஆண்டின் பற்றாக்குறையை பற்றி ஆனால் இந்த ஆண்டு மாற்றின வரியில் போன ஆண்டு எப்படி திருத்த முடியும்
தாலிக்கு தங்கத்தை நிறுத்தியது அதிமுக ஆட்சியில்தான் நான்கு ஆண்டுகளாக கொடுக்காமல் பின்னடையச் செய்தனர். நிறுத்தி வைத்த திட்டம் நாங்கள் வந்த பிறகு அதே 698 கோடி ரூபாயை தாலிக்கு தங்கத்திற்கு வைத்திருந்ததை மாற்றி ஒரு பைசா குறைக்காமல் அதனை கல்வித் தொகையாக வழங்குகிறோம். அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டத்தை மாற்று பெயரில் கல்லூரி மாணவிகளுக்கு உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தாலிக்கு தங்கம் நான்கு ஆண்டுகளாக வழங்காமல் இருந்து வந்தது அதிமுக ஆட்சியில், இதனால் அதிகப்படியான மனுக்கள் குவிந்தது. உங்கள் திட்டங்களை உங்களாலேயே நிறைவேற்ற முடியவில்லை.
மின்சார கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது அதனை கடந்த ஆண்டு நிதி பற்றாக்குறையுடன் ஒப்பிட்டு பேசுவது அடிப்படை புரிதல் இல்லாதது.

குறிப்பாக இலவச லேப்டாப் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கல் திட்டம் உள்ளிட்டவைகள் அதிமுக ஆட்சியில் நிறுத்தி விட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில்வரையில்கூட வருவாய் பற்றாக்குறை இல்லாத சராசரி மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. 2016க்கு பிறகு செயல்திறன், நிதி மேலாண்மை திறன் இல்லாத அரசாக இருந்துவிட்டு தற்போது எங்களை குறை சொல்வது தவறானது.

ஒன்றிய அரசின் பொது நிதியில் இருந்து பெரும் கடன் தொகையை கடந்த ஆட்சியில் எல்லை மீறி 30,000 கோடிக்கு மேல் சுருட்டி கொண்டனர். கூட்டணி கட்சி என்ற முறையில், டாடி என அழைத்த பிரதமர் அவர்கள் இவர்களை கேள்வி கேட்கவும் இல்லை,
டாடி பசங்களை பார்த்துக்கொண்டார், டாடி கண்டிக்கவில்லை சிஏஜி அறிக்கையில் உள்ளது. அதனால் தான் டாடி டாடி என்ன காலை பிடித்தனர்

கடந்த அதிமுக அரசு நிலுவையில் வைத்திருந்த 62,000 கோடி வருவாய் பற்றாக்குறையை 47,000 கோடியாக குறைத்துள்ளோம்,

திமுக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த ஆட்சியில் நிதி மேலாண்மை சரி இல்லை என்று உதயகுமாரிடம் குறை சொல்கிறார்கள் என்று சொல்வது நம்பகத்தன்மையற்றது.
முன்னாள் அமைச்சரை துணை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளது தன்இடத்தை காப்பாற்றுவதற்கும் நானும் இங்கே இருக்கிறேன் என்பதை தெரிவிப்பதற்காகவும் ஏதோ பேட்டி கொடுத்து வருகிறார்.
பொய்யான தரவுகள், அடிப்படை புரிதல் இல்லாதவற்றை மக்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் வெளியிடுவது சரியானது இல்லை.

நிதிநிலைமை சீர் செய்வது என்பது வருவாயில் பற்றாக்குறை இல்லாமல் இருப்பதே, அதிமுக ஆட்சியில் சரியவிட்ட வருவாய் பற்றாக்குறையை மூன்று நான்கு ஆண்டுகளில் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் கொண்டு வருகின்ற நிலையில்,

பெண்கள் இலவச பஸ் பயணம், பொங்கல் பரிசு, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம்.

மாநில அரசின் நிதி கொண்டு சமூகநீதி, நிதிநியாயத்திற்க்கு உட்பட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். உதாரணமாக காலை உணவு திட்டம் போன்ற திட்டங்கள் மாநிலம் முழுவதும் விரிவு படுத்த வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது அத.நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது உள்ளது என்றார்.

முக்கிய கருத்து எவ்வளவு பணம் இருந்தாலும் சமூக நீதி பொருளாதார நியாயம் உடன் ஏற்கனவே கூடுதலாக வாங்குபவர்களுக்கு ஏற்ப கொண்டு சேர்ப்பது அரசுக்கு கடமை. அதனை சமூக நீதிக்கும் பொருளாதாரம் நியாயத்திற்கும் எந்த அளவுக்கு நன்றாக விரைவில் செய்ய முடியும் அந்தஅளவிற்கு செய்வோம். காலை உணவு திட்டம் பைலட் ஸ்டேஜில் தான் உள்ளது அதனையும் மாநிலம் பூராக விரிவாக்க வேண்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் ஆகும் அதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார் முதல்வர் அறிவிக்கவும் மகளிர் ஊக்கத்தொகை திட்டங்கள் கொண்டு வந்தால் பல்லாயிரம் கோடிக்கு மேல் உள்ளது அதையும் செய்வது கடமை என்றார்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!