முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து சென்னை பம்மலில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து சென்னை பம்மலில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழ் முழுதும் பாஜகவினர் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பம்மல் நகரம் சார்பில் நகரத் தலைவர் கோகுல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வையும்,மின் கட்டண உயர்வையும் தமிழக அரசு திரும்பப்பெறக்கோரி பல்வேறு முழக்கங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்ஸ் சுதாகர் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும் இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் விஜயலஷ்மி, ஓ பி சி பிரிவின் மாவட்ட துணை தலைவர் காசிராஜன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!