முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூ 5...

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச்

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச் அரசு தலைமை கொறடா வழங்கினார்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, மாணவிகள் அமர்ந்து படிக்க தேவையான பெஞ்ச் மற்றும் மேஜைகள் பற்றாக்குறை இருந்து வந்தது.

இதுகுறித்து பள்ளியின் மேலாண்மை குழு சார்பில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஊராட்சி குழு நிதிலிருந்து ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் திமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாலகுரு தலைமையில், 33 செட் மேஜை, பெஞ்ச், அரசு பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மேஜை, பெஞ்சை வழங்கினார். இதில் திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெருந் தலைவர் கோ.க அண்ணாதுரை ஒன்றிய செயலாளர்கள் மிசா மனோகரன் உதயசந்திரன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!