அதிகாலையில் பெண்கள் எழுந்தவுடன் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் மேலும் கடைபிடிக்க கூடாத விஷயங்கள் என்று உள்ளது. அதனை பின்பற்றுவதன் மூலம் அந்த செல்வசெழிப்புடன் விளங்கும். ஒவ்வொறு குடும்பத்தின் ஆணிவேர் பெண்கள் தான் அப்படி உள்ள பெண்கள் காலை எழுந்தவுடன் வீட்டில் உள்ள பணிகளை செய்து கொண்டு இருப்பதால் தான் அந்த குடும்பம் சிறந்த முன்னேற்ற செல்வதை காணமுடிகிறது.
ஒரு குடும்பதை சந்தோஷமாக வழி நடத்த பெண்களால் மட்டுமே முடியும். பெண்கள் என்றாலே தனிசிறப்பு அவர்களுக்கு உண்டு அப்படிப்பட்ட பெண்ணின் பழக்கவழக்கத்தை வைத்து தான் சொல்லமுடிகிறது குடும்பம் முன்னேறுகிறது என்று ஆகவேதான் பெண்கள் இல்லாமல் ஒரு வீடானது முழுமை பெறாது. நம் முன்னோர்கள் குடும்ப பொறுப்பை பெண்களிடந்தான் ஒப்படைப்பார்கள், ஆகவேதான் பெண்களை மகாலெட்சுமி என்று போற்றுகிறார்கள்.
இப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சில வரைமுறைகள் இருக்கிறது. இந்த விதிமுறைகளை பெண்கள் கடைபிடித்தால் நம்குடும்பம் கோவிலாகவும், சந்தோஷமாகவும் மாறிவிடும் .
அதிகாலை நேரத்தில் விளக்கு ஏற்றுதல்
பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை நேரத்தில் பெண்கள் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து விட்டு, குளித்தவுடன் பிற வேலைகளை பார்க்கவேண்டும். காலை,மாலை இரு வேளைகளிலும் நம் வீட்டிலுள்ள பூஜை அறையில் கடவுளுக்கு விளக்கு ஏற்றி கும்பிடுவது நம் வீட்டிற்கு மிகவும் நல்லது. இதனை பெண்கள் தவறாமல் பின்பற்றவேண்டும். இவ்வாறாக பெண்கள் கடைபிடித்து வந்தால் மகாலெட்சுமி மனமகிழ்ந்து நம் வீட்டிலேயே தங்கி விடுவாள். இவற்றினை கடைபிடிப்பதால் நம் குழந்தைகளும் நாம் செய்வதை பார்த்து நாமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அப்படியே நடந்துகொள்வார்கள்.

ஆடை காலையில் எழுந்தவுடன் காலைவேலைகளை முடித்துவிட்டு குளித்தபின் நல்ல ஆடைகளை அணிந்து கொள்ளவேண்டும். நைட்டி அணியாமல் கட்டாயம் புடவைதான் அணிந்து கொள்ளவேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆனால் விளக்கு ஏற்றும்போது புடவை அணிந்து கொள்வது நல்லது. இதனால் நம்முடைய இல்லத்தில் ஒரு நேர்மறை ஆற்றலை நம்மால் உணரமுடியும்.
குங்குமம் வைத்து கொள்ளுதல்
குங்குமம் என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் திருமணம் ஆன பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். குங்குமம் என்றால் மங்களகரமான ஒன்று அப்படி பட்ட குங்குமத்தினை திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் வைத்து கொள்ளும் பொழுது ஒரு பாதுகாப்பாக இருந்து அவர்களை காப்பாற்றுகிறது. குடும்பத்தின் ஐஸ்வரியத்திற்கும், கணவனின் நீண்ட ஆயுளுக்கும் இந்த குங்குமம் வழிவகுக்கிறது.

அதாவது திருமணமானப்பெண்கள் மூன்று இடங்களில் குங்குமம் வைக்க வேண்டும். நெற்றியில், முன் வகுடில் மற்றும் தாலியில் வைக்கவேண்டும்.
மாலையில் அடுத்த வீட்டிற்கு செல்வதை தவிர்க்கவும்
மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் திருமணமான பெண்கள் அடுத்த வீட்டிற்கு போகக்கூடாது. குறிப்பாக திருமண ஆன பெண்கள் செவ்வாய், வெள்ளி வீட்டை விட்டு வெளியேறி அடுத்த வீட்டில் தங்கக்கூடாது. மாலை நேரம் என்றால் ரிஷிகளும் தேவர்களும் நம் வேண்டுதலை நிறைவேற்ற நம் வீட்டிற்கு வருவார்கள் என்று நம்புகிறார்கள். அதனால் அந்த நேரத்தில் திருமணமான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
சிரித்த முகம்

வீட்டில் உள்ள பெண்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணவேண்டும். ஒரு வீட்டில் எவ்வளவுதான் கஷ்டங்கள் இருந்தாலும் அந்த பிரச்சனைகளை பெண்ணானவள் சிரித்த முகத்தோடு ஏற்று அதற்கான தீர்வினை அடைய முயற்சி மேற்கொள்கிறார்களோ அந்த வீட்டில் கஷ்டம் என்பது தங்கவே தங்காது.
நெஞ்சு வலி Vs மாரடைப்பு… இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன..? கண்டறியும் அறிகுறிகள்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்