Homeசெய்திகள்சனாதனம், சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சை ஆக்கப்பட்டது ஏன்? எதற்க்காக?

சனாதனம், சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சை ஆக்கப்பட்டது ஏன்? எதற்க்காக?

Date:

சனாதனம் தர்மம் பற்றி கடந்த சில தினங்களாக அரசியல் ரீதியான விவாதம் நடக்கக்கூடிய அளவிற்கு மிக முக்கிய விஷயமாக மாறி இருக்கிறது. இதனால் சனாதன தர்ம….. சனாதன தர்மம் என்பதை பற்றி ஆன்மீக ஆராட்சியாளர்களும், வரலாற்று ஆராட்சியாளர்களும் பல வித விளக்கங்களை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் சனாதனம் தர்மம் என்றால் என்ன என்பதை பற்றி முதலில் தெரிந்து கொண்ட பிறகுதான், அந்த சனாதன தர்மம் எதற்காக, எந்த வகையில் சர்ச்சைக்குள்ளான விஷயமாக மாறி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

Sanatana Dharma Meaning in Tamil..!
சனாதனம், சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சை ஆக்கப்பட்டது ஏன்? எதற்க்காக?

சனாதனத்தர்மம் என்றால் என்ன ?

சனாதன எதிர்ப்பு மாநாட்டில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் பதட்டத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

சந்தானம் என்ற சொல் சமஸ்கிருத சொல்லாகும். இந்த சொல்லிற்கு நிலையான நம்பிக்கை, அசைக்க முடியாத நித்ய சட்டம், நிலையான தத்துவ ஞானம், மரியாதைக்குரிய ஒழுங்கு முறை என பலவிதங்களாக பொருள்கள் சொல்லப்படுகிறது. அதாவது சனாதன தர்மம், வர்னாசராம தர்மம் என்று இரண்டு வகையாக சொல்லப்படுகிறது.

இந்த இரண்டில் சனாதன தர்மம் என்பது, அனைவருக்கும் பொதுவான கடமை மற்றும் ஒரு ஆன்மீக அடையாளமாகும். அதே போல் வர்னாசராம தர்மம் என்பது காலம் ஒருவரின் வாழ்க்கை சூழல் அதை பொறுத்து வகுக்கப்படும் கடமையாகும். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல், நிலையான நெறிமுறைகளை கொண்டது, சேவை செய்தல் தொன்மையானது என்பதே சனாதன தர்மமாகும்.

சனாதன தர்மம் எப்போது தோன்றிற்று?

சனாதனம் என்ற சொல் திருக்குறள் மற்றும் மகாபாரதத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆன்மீக ஆன்றோர்கள் கூறுகையில், சனாதன தர்மம் என்பது பெற்றோர்களை மதித்து எப்படி நடக்கவேண்டும் இறைவனை எவ்வாறு மதிக்க வேண்டும், அனைவரிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று போதிக்கும் முறையாகும். மதம், ஜாதி இவை எல்லாம் பிற்காலத்தில் தோன்றியவை. இது வாழ்வியல் நெறிமுறைகளை சொல்லக்கூடியது என்கிறார்கள்.

சனாதன தர்மம் 10 வகையாக சொல்லப்படுகிறது

1.வர்னதர்மம்
2.சமான்யதர்மம்
3.வர்னாஸ்ரம தர்மம்
4.ஆஷ்ரமதர்மம்
5.அபத்தர்மம்
6.குணதர்மம்
7.ஸ்திரி தர்மம்
8.ஸ் ரௌத தர்மம்
9.ராஷ்டிர தர்மம்
10.வியாஸ்தி தர்மம்

இவைகள் அனைத்தும் தனி மனிதன் முதல் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பது வரை ஒவ்வொன்றும் வழிகாட்டுவதாகும்.

மாற்றம் பெற்ற சனாதனத்தர்மம் :

சனாதன தர்மம் என்பது மறுபிறவி, ஆன்மா ஆகியவற்றினை நம்பும் நித்திய மதங்களை குறிப்பதாகும். சனாதன சொல் இந்து மதத்துடன் தொடர்புடையது என்று சொல்லப்பட்டாலும், பௌத்த மதத்தவர்கள், ஜெயினர்கள் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும்.

19ம் நூற்றாண்டிற்கு பிறகே சனாதன தர்மம் மற்ற மதங்களில் இருந்து வேறுபட்டு, இந்து மதத்தை குறிக்க பயன்படுத்தப்பட்டது.இது இந்து மதத்திற்குள் ஒருமைப்பாட்டை தூண்டுவதற்கென பயன்படுத்தப்படுகிறது.

காட்டுமன்னார்கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..

அமைச்சர் உதயநிதி பேசியது என்ன ?

சனாதன தர்மம் என்பது யாரும் மாற்ற முடியாதது யாரும் கேள்வி கேட்க முடியாதது என்று அர்த்தம், எதுவும் நிலையானது கிடையாது, எல்லாவற்றையும் மாற்றவேண்டும், எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும். மலேரியா, கொசு, கொரோனா, டெங்கு போன்ற நோய்களை போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும். எதிர்க்கக்கூடாது என்று அமைச்சர் உதயநிதி, நோய்களுடன் ஒப்பிட்டு பேசியதால், அந்த பேச்சு சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் மக்கள் பெரிதும் நம்பி ஏமாறிய முட்டாள்தனமான 10 கட்டுக்கதைகள்! | Mystery Story | Mystery

சனாதனத்தர்மம் சர்ச்சையானது ஏன்?

எந்த காலத்திற்கும் பொருந்தும் வகையில், அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில், ஒரு தன்னுடைய வாழ்க்கையை இப்படி வாழ வேண்டும் என்ற கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ள முறையை ஒழிக்க வேண்டும் என பொருள் பட பேசியது தான் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. சந்தானதர்மத்தை பற்றி பெரும்பாலானவர்க்கு பொருள் தெரியாது. இது இந்து மதம் பற்றி குறிக்கும் சொல் என்று பலரும் கருதுகிறார்கள். ஆகவே சனாதன தர்மம் என்பது மதம் சம்பந்தம்சார்ந்த விஷயமாக மாற்றப்பட்டு, சர்ச்சையாக்கபட்டதற்கு காரணமாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க


Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related