ஈரோட்டில் நடந்தது இடைத்தேர்தல் அல்ல தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்கு மக்கள் எடை போடுகிற தேர்தல்: இருக்கை ஊராட்சியில் முதல்வரின் பிறந்தநாள் விழாவில் மீன் வளர்ச்சி கழகத் தலைவர் பேச்சு

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி திமுக நிர்வாகிகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் இருக்கை ஊராட்சியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட பிரதிநிதி ஷேக் முகமது தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினரும் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நாகை மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன் கலந்து கொண்டு ஈரோட்டில் நடைபெற்றது

இடைத்தேர்தல் அல்ல தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்கு மக்கள் எடை போடுகிற தேர்தல், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மக்கள் தமிழக முதலமைச்சரின் மீது வைத்துள்ள நம்பிக்கை எனவும்
இன்று எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லை அது மிகவும் பலகீனமாக உள்ளது. என தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து மாற்று கட்சியில் இருந்து விலகி 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு தேவூர், இருக்கை, பெருந்தலைக்குடி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் எழுதுபொருளுக்கான தொகுப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பசுமை ஊராட்சியாக இருக்கை ஊராட்சியை மாற்றுவதற்கு 250க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மா, பலா, தென்னை, சப்போட்டா, நெல்லி, போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னதாக திமுக கழக கொடி ஏற்றி வைத்து தமிழக முதல்வர் வாழ்க என உற்சாக முழக்கமிட்டனர்.

இவ்விழாவில் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எஸ்.கே.ஜி சேகர், பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தங்கதுரை ராசாமாணிக்கம், கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் தங்க மனோகரன், மாவட்ட அகிலக அணி துணை அமைப்பாளர் ஜவகர், மீனவர் அணி அமைப்பாளர் ரகுமான்,
கீழ்வேளூர் ஒன்றிய துணைச் செயலாளர் பாபு, ரவி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மதியழகன், வெண்மணி ஊராட்சி மன்ற தலைவர் மகாதேவன்,
முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா விஜயராகவன், ஒன்றிய பிரதிநிதி ரஹமத்துல்லா, இருக்கை கிளை அவைத்தலைவர் அப்துல் சலாம்,

திமுக நிர்வாகிகள் டி.குமார், செல்வம், பாஸ்கர், மகேந்திரன், சங்கர்அய்யா, ராஜேந்திரன், பக்கிரி சாமி, சிவா, ஜாகிர் உசேன் மற்றும் இருக்கை ஊராட்சி பொதுமக்கள் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.