தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, வேதாராண்யம் வட்டாட்டசியர் அலுவலகம் முன்பாக கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் வட்ட தலைவர் கோபிநாத் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத்தில் உள்ள 52 ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் கலந்துக்கொண்டு சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும், ரத்து செய்யப்பட்ட பட்ட படிப்பு ஊக்க உதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் செந்தில்குமார், வட்ட பொருளாளர் செல்வி உள்ளிட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கீழ்வேளூர் வட்ட நிர்வாகிகள் உள்பட அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துக் கொண்டனர். வரும் 24ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என தெரிவித்தனர்