மங்களகரமான சோபகிருது ஆண்டு ஆவணி மாதம் 28ஆம் தேதி [ 14 செப்டம்பர் 2023 வியாழன் ] மேஷம் , ரிஷபம் , மிதுனம் , கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் ராசிகளுக்கான பலன்களை தெரிந்துக்கொள்வோம் .

நல்ல நேரம் காலை :10.45-11.45மணி வரை
மேஷம்
பயணங்கள் மூலம் அனுபவம் கிடைக்கும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்லும் தோன்ற கூடும். கடன்விஷயமாக சிந்தித்து செயல்படவேண்டும். புதிய நபர்களின் நட்பு உருவாகும். பிள்ளைகளால் வரவு கிடைக்கும். மனதில் புதிய ஆசைகள் தோன்றும்.
ரிஷபம்
எடுக்கும்முயற்சிகள் அனைத்தும் சாதகமாக முடியும். உயர்கல்விக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். உங்களோடு பணிபுறியும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி சந்தோஷப்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி குறையக்கூடிய வாய்ப்பு உண்டு. வதந்திகள் ஏற்பட்டு நீங்கும்.
மிதுனம்
கடினமான வேலைகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். எதையும் செய்யும் தன்னம்பிக்கை மேலோங்கும். எழுத்து சார்ந்த பணியில் முன்னேற்றம் ஏற்படவாய்ப்புகள் ஏற்படும். நியூ டெக்னாலஜி கருவிகள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்
தற்பெருமையான சிந்தனைகளை குறைத்துகொள்வது நல்லது. உங்களின் பேச்சுகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். உடலில் சோர்வு நீங்கும். வீட்டை விரிவாக்கும் எண்ணம் மேம்படும். கணவன் -மனைவி இடையிலான கருத்து வேறுபாடுகள் விலகும்.
சிம்மம்
உள்ளூர் பயண வாய்ப்புகளின் மூலம் அனுகூலம் கிடைக்கும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவேண்டும். சகோதரவழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக கூடும். சகோதரர்களை அனுசரித்து செல்லவேண்டும். மனதில் சில குழப்பங்கள் ஏற்பட்டு பின் நீங்கும். நினைத்தகாரியத்தை செய்து முடிப்பீர்கள்.
கன்னி
சொன்ன வாக்கால் தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்றம், இறக்கம் ஏற்படும். கடன் குறைய வாய்ப்புகள் உண்டாகும். வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகளால் அலைச்சல் ஏற்படும்.
துலாம்
கலை பணியில் ஆர்வம் வரும் .சுறுசுறுப்புடன் செயல்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன் ஏற்படும். சபை நிமிர்த்தமான பணியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதர ,சகோதரி ஒற்றுமை மேலோங்கும். வருங்காலத்திற்கான சேமிப்பினை மேம்படுத்துவீர்கள்.
விருச்சிகம்
வியாபாரத்தில் இருந்த மந்தமான சூழல் குறையும். மல்யுத்த போட்டிகளில் ஆர்வம் வரும். நிர்வாக செயல் பாடுகளில் யோசித்து செயல்படவும். வாழ்க்கை துணைவரால் ஆதாயம் ஏற்படும். நண்பரிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
தனுசு
நினைத்தது எல்லாம் கைகூடும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். வியாபாரத்தில் அனுபவம் மேம்படும். உயர் கல்வியில் புதிய அனுபவம் ஏற்படும். திடீரென பணவரவு ஏற்படும்.
மகரம்
எதிர்பாராத செலவு உண்டாகும். மற்றவர்களிடம் பொறுமையுடன் பாதுகாப்பாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை மந்தநிலை காணப்படும். மனதில் சொல்ல முடியாத ஏற்பட்டு நீங்கும். கணவன் -மனைவி இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
கும்பம்
உத்யோக பணிகளில் பொறுப்புகள் கூடும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு எட்டும். மனை சம்பந்தமாக லாபம் கிடைக்கும். உறவினர்களோடு இருந்த பிரச்சனை குறையும்.மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம்
நெருங்கியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சொத்து வழக்கில் முடிவு சாதகமாக அமையும். ஆனால் பேச்சில் நிதானம் வேண்டும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் புதிய சந்தோஷம் ஏற்படும். வேலை மாற்றங்களில் சாதகமாக அமையும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்