நாகையில் பிரபல நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது 3 மகன்கள் கைது ஆன நிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் .
நாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாகையின் பழமைவாய்ந்த நம்பகத்திற்குறிய நிறுவனம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.

குறிப்பாக சிவசக்தி நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால், வைப்பு தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனர். இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு வழங்கப்படவில்லை .
இந்த விடியோவை பாருங்க : நல்ல கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்..? அதிகமானால் குறைக்கும் வழிகள் என்ன..?

பின்னர் நிதி நிறுவனத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்ட பயனாளிகள் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 6 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பலமுறை காலஅவகாசம் கொடுத்தும் இதுவரை நிதியை திருப்பி செலுத்தாத காரணத்தால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் நாகை மாவட்ட ஆட்சியர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

பொதுமக்களின் அடுக்கடுக்கான புகார்களை அடுத்து சிவசக்தி நிறுவனங்களின் உரிமையாளர் ரவி விசாரணையில் கிட்டத்தட்ட 3000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கட்டிய வைப்புதொகை, சீட் தொகை, சேமிப்பு கணக்கு தொகை சுமார் 220 கோடி ரூபாய் திருப்பி கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: ஊரே வியக்கும் அளவில் அனகை ஜெய்பிரதர்ஸ் கொண்டாடிய முன்னாள் நகர மன்ற தலைவரின் பிறந்தநாள் விழா

அதனை தொடர்ந்து பொதுமக்களை நம்ப வைத்து நிதி மோசடி செய்து ஏமாற்றிய சிவசக்தி நிறுவன உரிமையாளர் நாகையின் பிரபல தொழிலதிபர் ரவி மற்றும் அவருடைய மகன்கள் பாலாஜி, சிவா, செந்தில் உள்ளிட்ட நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கைது நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நாகை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகார் பெரும் மையத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து பல மணி நேரம் காத்திருந்து புகார் மனு அளித்துள்ளனர் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு செலுத்திய பணத்தை திரும்ப மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்