Homeபொழுதுபோக்கு“ஆத்தங்கரை மரமே” பாடலில் வந்த பேச்சியா இது.. மார்டன் உடையில் செம மோட்டிவேஷன்..

“ஆத்தங்கரை மரமே” பாடலில் வந்த பேச்சியா இது.. மார்டன் உடையில் செம மோட்டிவேஷன்..

Date:

கிராமத்து கதை அம்சம் கொண்ட திரைப்படம் “கிழக்கு சீமையிலே”. இப்படத்தில் “ஆத்தங்கர மரமே அரசமர இலையே” என்ற பாடலில் நடித்தவர் ருத்ரா. இவர் அப்படத்தில் பேச்சியம்மா கேரக்டரில் நடித்து இருந்தார். தற்போது ருத்ரா மார்டன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றது.

RUDRA HEROINE

வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை நடிகை ருத்ரா நிரூபித்துயுள்ளார். நடிகை ருத்ரா வின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கு நீங்கதான் மோட்டிவேஷன் என கூறி வருகின்றனர்.

மேலும் இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது நடிகை ருத்ரா வின் நிலைமை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பல ரசிகர்களுக்கு தங்களோட ஃபேவரைட் திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகர்களின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அவங்களா இவங்க என்று வியப்பா இருக்கும். அந்த மாதிரி தான் இப்பொது கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த ருத்ரா வின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இருக்கு. நடிகை ருத்ரா அதிகமான மலையாள திரைப்படத்திலும் குறைவான தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை ( Rudhra) ருத்ராவின் உண்மையான பெயர் அஸ்வினி. மலையாளத்தில் சீரியல் மற்றும் பல திரைப்படங்களில் தற்போது நடித்து வருகின்றார். சமீபத்தில் இவரை அதிகமாக தமிழ் திரைப்படங்களில் காண முடிவதில்லை. ருத்ரா பள்ளி பருவத்தில் நண்பர்களோடு சேர்ந்து மாடலிங் புகைப்படங்களை மலையாள பத்திரிகைகளில் வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க : டோலி சிங் வாழ்க்கை விபரம், திரைப்படங்கள், உயரம், வயது மற்றும் படங்கள்

அந்த மாடலிங் புகைப்படங்களை பார்த்த இயக்குனர் பாரதிராஜா ருத்ராவிற்கு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அப்படத்தில் மரிக்கொழுந்து என்ற கேரக்டர் மிகவும் பிரபலமானது. அதனை அடுத்து அடுத்தடுத்த மலையாள திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து உள்ளது. பின்பு
தமிழில் பேச்சியம்மா கேரக்டரில் கிழக்கு சீமையிலே படத்தில் நடித்தார்.

RUDRA HEROINE
Rudhra

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் ஆனால் ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் அதிகம் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் ருத்ரா டான்ஸர் ஆகவும் இருந்துள்ளார். முன்னணி நடிகையாக இருந்த போதே ருத்ராவிற்கு திருமணம் முடிந்து உள்ளது அதன் பின் சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பின் ஒரு சில வருடங்கள் கழித்து குறும்படங்களிலும் நடித்தார்.

இதையும் படிங்க : நடிகை சயாமி கெர் வாழ்க்கை விபரம், திரைப்படங்கள், உயரம், வயது மற்றும் படங்கள்

ருத்ரா கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஏஞ்சல் காலனி மற்றும் எழுத்தர் அலமேலு மங்கை என்ற குறும்படங்களில் நடித்துஉள்ளர். இது மட்டும் இன்றி சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி, சின்ன சின்ன ஆசை- நிறங்கள், ராஜராஜேஸ்வரி, நிம்மதி, உங்கள் சாய்ஸ் என சீரியல்களில் நடித்து இருந்தார். இந்த நிலையில் ருத்ரா சமீபத்தில் எடுத்த மாடர்ன் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

RUDRA HEROINE
Rudhra

ருத்ரா – வின் மாடர்ன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறாரே? எனவும் ருத்ராவிற்கு மட்டும் வயது ஏறவில்லையா? எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் பாவாடை தாவணியில் நடித்து கலக்கி இருப்பார். தற்போதும் அதே அழகோடு இருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர். மேலும் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் ருத்ரா இருந்துவருகிறார் எனவும் சொல்கின்றனர்

எதிரிகள் முகாமில் கிடைக்கும் தேர்தல் வெற்றி எள்ளளவும் சமுதாயத்திற்க்கு உதவாது – டிஎம்.புரட்சி மணி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க


Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! கோலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லா அழகு முகங்கள்.. ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்..? இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க! பிரபல நடிகையை திருமணம் செய்யவிருக்கும் அசோக் செல்வன் ? கல்யாணம் எப்போ? நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கோபுரம் இல்லாததற்கு என்ன காரணம் தெரியுமா.?
ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! கோலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லா அழகு முகங்கள்.. ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்..? இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க! பிரபல நடிகையை திருமணம் செய்யவிருக்கும் அசோக் செல்வன் ? கல்யாணம் எப்போ? நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கோபுரம் இல்லாததற்கு என்ன காரணம் தெரியுமா.?