காரப்பிடாகை அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் போடப்படும் சாலையை மேடாக்கி உயர்த்தி போடப்பட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காரப் பிடாகை மன்மதன் கோவில் சாலை பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையானது சாக்கடையாகவும் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கியும் இதனை சாலையாக பயன்படுத்தி வந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்
இந்த விடியோவை பாருங்க: ஈரோட்டில் நடந்தது இடைத்தேர்தல் அல்ல தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்கு மக்கள் எடை போடுகிற தேர்தல்

தற்பொழுது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலை பணி நடைபெறுகிறது அந்த சாலையானது பேரளவில் போடப்படுவதாகவும் ஆகையால் தரமற்றதாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கை என்னவென்றால் அந்த சாலையை மேடாக்கி உயர்த்தி மழை நீர் தேங்காத அளவிற்கு உயர்த்தி போட வேண்டும் அந்த சாலையின் நீளமானது 220 மீட்டர் ஆனால் தற்பொழுது போடப்படும் அளவு வெறும் 165 மீட்டர் தான் மீதி குடும்பங்களுக்கு சாலை செல்லாததால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்
இதையும் படிங்க :

உடனடியாக அந்த சாலையை 220 மீட்டரையும் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் சாலையானது உயர்த்தி அமைக்க வேண்டும் வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
